தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தென் ஆப்ரிக்காவில் 16 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டனர், 25 பேர் உயிரிழந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டார்களா? அல்லது ஒமைக்ரானால்
Increased, Corona, Infection, Children, South Africa, தென் ஆப்ரிக்கா, குழந்தைகள், கொரோனா தொற்று, அதிகரிப்பு,

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தென் ஆப்ரிக்காவில் 16 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டனர், 25 பேர் உயிரிழந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டார்களா? அல்லது ஒமைக்ரானால் உயிரிழந்தார்களா? என்பது உறுதியாகவில்லை.


latest tamil news


ஆனால், கடந்த காலத்தில் டெல்டா வைரஸால் அதிகமான அளவு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மூன்றாவது அலையில் 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகள், 15 வயது முதல் 19 வயதுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதிகமான பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்கிறது.

தென் ஆப்ரிக்க சுகதாார துறை அமைச்சகத்தின் பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் வாசிலா ஜாஸட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நான்காவது கொரோனா அலை துவங்கியுள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக பாதிப்பு குழந்தைகளுக்கு தான் இருக்கிறது.

கடந்த காலங்களில் நாங்கள் பார்த்ததைவிட இப்போது வித்தியாசமாக இருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் 9 மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் மைக்கேல் க்ரூம் கூறியதாவது: குழந்தைகளுக்கு திடீரென தொற்று அதிகரித்துள்ளது குறித்து தீவிரமான ஆய்வு தேவை. நான்காவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் எந்த பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியும். குழந்தைகளுக்கான படுக்கைகள், செவிலியர்கள், மருந்துகள், ஐ.சி.யு.,க்கள் ஆகியவற்றை தயார் செய்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
04-டிச-202118:01:07 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் உலகை படைத்த கடவுளே... இந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்று...? வஞ்சமிலா, நஞ்சறியா, நச்சறியா இப்பிச்சுகளை காப்பாற்று...? இன்றைய அட்வான்ஸ் சயின்ஸ் படித்த, படிக்குற இக்கால இளைஞர்களையும், பெரிசுகளான தப்பு செஞ்ச பயலுக, ஒருத்தனையும் விடாத... ஆனா, இந்த மனித தெய்வங்களை (பிஞ்சு குழந்தைகளை) தண்டிக்காதே.... விட்டுவிடு... கடவுளே...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-டிச-202117:38:54 IST Report Abuse
Tamilan இந்தியாவில் உள்ளவர்களுக்கு வராதா?. இனியும் ஏன் பள்ளிகளை திறந்துவைத்திருக்கிறார்கள் . அனைத்தையும் e படிப்பு , e e e e e என்று இளித்தவாயர்களைப்போல் இருக்கவேண்டியதுதானே . இதை கட்டுக்குள் கொண்டு வரும் வரையாவது e e என்று இருக்கவேண்டியதுதானே ?. உலகமயமாக்கலுக்கு வாழ்க்கப்பட்டுவிட்டு இதெற்கெல்லாம் சலித்துக்கொண்டாள் எப்படி ?
Rate this:
sivan - seyyur,இந்தியா
05-டிச-202106:26:28 IST Report Abuse
sivan பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை யாருக்கும் இங்கே கோரோனோ வரவில்லை. தியேட்டரை மூடும்படி ...சொல்லவில்லை.. டாஸ்மாக் மூடும்படி சொல்லவில்லை./ பொழுது போகாமல் மாலில் சுற்றிக் கொண்டிருக்கும் இளவட்டங்களை சொல்லவில்லை . பள்ளியை மட்டும் மூட வேண்டுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X