பொது செய்தி

இந்தியா

மத்திய அரசுடன் பேச்சு நடத்த குழு அமைத்த விவசாயிகள்

Updated : டிச 05, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் அமைத்துள்ளனர்.வேளாண் சட்டங்களை, விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெற்று கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதா கடந்த திங்கட்கிழமை, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதா திரும்ப
மத்திய அரசு, விவசாயிகள்

புதுடில்லி: நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை, விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெற்று கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதா கடந்த திங்கட்கிழமை, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதா திரும்ப பெறப்பட்டது.

இதற்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்த போதிலும், குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி, இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், எஞ்சிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.


latest tamil news




5 பேர் கொண்ட இந்த குழுவில் பல்பீர் சிங்,ராஜேவல் அசோக் தவாலே ஷிவ்குமார், குர்னம் சிங் சதுனி மற்றும் யுத்விர் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் 7 ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் மற்றும் எஞ்சிய கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்படும் வரை போராட்ட களத்தில் இருந்து செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர். பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான யுத்விர் சிங் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நேற்று(டிச.,3) இரவு எங்களை அழைத்த அமித்ஷா, விவசாய சட்டங்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டது. எஞ்சிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அரசுடன் ஆலோசனை நடத்த குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால், குழு அமைத்தோம். மத்திய அரசுடன் , இந்த குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், போராட்ட களத்தில் இருந்து செல்வது குறித்து 7 ம் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-டிச-202120:00:34 IST Report Abuse
sankaseshan போலி விவசாயிகளின் போராட்டம் முடியாது , ஒரு கோரிக்கை நிறைவேறிய உடன் அடுத்ததை ஆரம்பிப்பானுங்க சுயநலவாதிகள்
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
04-டிச-202119:32:30 IST Report Abuse
Arul Narayanan போராட்டவாதிகள் அனைத்து மாநில விவசாயிகளின் ஏகபோக பிரதிநிதிகளா? இதை எப்படி மத்திய அரசு ஏற்று கொள்கிறது?
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
04-டிச-202119:15:26 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சிறு மற்றும் ஏழை விவசாயிகள் சங்க நிர் வாகிகளும் இந்த குழுவில் பங்கு வேண்டும் என அனைத்து மாநில சிறு மற்றும் ஏழை விவசாயிகள் வலியுருத்த வில்லை என்றால் அனைத்து ஏழை விவசாயிகளும் உண்மை தெரியாமல் ஏமாற்றப்பட்ட்டு மொத்த வியாபாரிகள் நலன் மட்டும் உறுதி செய்யப்பட்டு மத்திய அரசும் ஒன்றும் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்க்கை கடந்த அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் போல் விவசாயிகள் ஏழைநிலை தொடரும் என்பதில் துளியும் ஐயம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X