மதிப்புமிக்க நேரங்கள் வீண்: காங்., மீது பிரதமர் தாக்கு

Updated : டிச 05, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
டேராடூன் :''நாட்டின் மதிப்புமிக்க நேரங்களை மத்தியில் ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐ.மு., கூட்டணி அரசு வீணடித்துவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் இங்கு ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்
Some Political Parties, Pushed, People, Selflessness, Pm, Modi Accusation, மக்கள், சுயசார்பற்ற நிலை, தள்ளிய சில அரசியல் கட்சிகள், பிரதமர் மோடி, குற்றச்சாட்டு,

டேராடூன் :''நாட்டின் மதிப்புமிக்க நேரங்களை மத்தியில் ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐ.மு., கூட்டணி அரசு வீணடித்துவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் இங்கு ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு நாட்டில் சாலை இணைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அதற்கு பின் 2004ல் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு சாலைகள் இணைப்பை கிடப்பில் போட்டது. நாட்டின் மதிப்புமிக்க நேரங்கள் ௧௦ ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வீணடிக்கப்பட்டன. மத்தியில் ௨௦௧௪ல் நாங்கள் பொறுப்பேற்ற பின், சாலை இணைப்பு திட்டங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. ௧௦ ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐ.மு., கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு பணிகளில் ஊழல்கள் தலைவிரித்தாடின. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பணிகளில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.latest tamil newsஉத்தரகண்ட் வளர்ச்சிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள மலைகள் நம் கலாசாரத்தின் சின்னங்கள் என்பதுடன், நம் பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுடன் வாழ வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் மலைப்பகுதிகளிலும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202110:27:17 IST Report Abuse
பேசும் தமிழன் எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் எங்களுக்கு நீங்கள் பிரதமாராக கிடைத்து இருக்கிறீர்கள்.... இப்போது பேருந்தொற்று உள்ள நிலையில் முன்னால் இருந்தவர்கள் பிரதமராக இருந்து இருந்தால்.. நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஊசி மருந்தில் இருந்து.. கட்டு போடும் துணி வரை கமிசன் அடித்து.... நாட்டை சுடுகாடாக மாற்றி இருப்பர்கள். உங்களை போன்ற சீரிய முறையில் ஆட்சி நடத்தும் நபர் பிரதமாராக இருப்பதால் தான் நாங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
05-டிச-202100:50:52 IST Report Abuse
PRAKASH.P Government itself selling all properties to private and going to beg very soon...
Rate this:
Cancel
04-டிச-202122:56:36 IST Report Abuse
அப்புசாமி முழுமையான சுயசார்புக்கு அரசு இல்லாத நிலைமை தேவை. அதாவது anarchy. இங்கே நடப்பது நடிப்பு சுயசார்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X