பொது செய்தி

இந்தியா

ஏ.கே., 203 ரக துப்பாக்கி உ.பி.,யில் தயாரிக்க முடிவு

Added : டிச 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:ராணுவ வீரர்களுக்காக ஏ.கே., 203 ரக அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை கட்டமைக்கப் பட உள்ளது.நம் பாதுகாப்புப் படை வீரர்கள் 'இன்சாஸ்' எனப்படும் ஒரு வகை துப்பாக்கியை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப் பட்டு வரும் இந்த துப்பாக்கிக்கு மாற்றாக, வேறு ஒரு
 ஏ.கே., 203 ரக துப்பாக்கி உ.பி.,யில் தயாரிக்க முடிவு

புதுடில்லி:ராணுவ வீரர்களுக்காக ஏ.கே., 203 ரக அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை கட்டமைக்கப் பட உள்ளது.
நம் பாதுகாப்புப் படை வீரர்கள் 'இன்சாஸ்' எனப்படும் ஒரு வகை துப்பாக்கியை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப் பட்டு வரும் இந்த துப்பாக்கிக்கு மாற்றாக, வேறு ஒரு துப்பாக்கியை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது; அதற்கான ஒப்புதலும் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏ.கே., 203 ரக துப்பாக்கிகளை உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில், ஒரு பிரத்யேக ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது.
அதிநவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட உள்ள இந்த துப்பாக்கிகள், மிகவும் எடை குறைவானவை. 300 மீட்டர் அல்லது மூன்று கால்பந்து மைதானங்களை தாண்டி இருக்கும் இலக்கையும், இந்த துப்பாக்கியால் துல்லியமாக தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X