அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாலைகளை செப்பனிடும் பணி விரைந்து முடிக்க உத்தரவு

Added : டிச 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'சென்னை முழுதும், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணியை, நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக முடிக்க வேண்டும்' என, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் கடந்த மாதம் பெய்த கன மழையால், சாலைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தார்.
 சாலைகளை செப்பனிடும் பணி விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை:'சென்னை முழுதும், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணியை, நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக முடிக்க வேண்டும்' என, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த மாதம் பெய்த கன மழையால், சாலைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தார். முதல் கட்டமாக, சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னையில் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட, 258 கி.மீ., சாலைகளை ஆய்வு செய்ததில், 58 கி.மீ., சாலைகள் சிதிலமடைந்துள்ளன.
இது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசித்தார். அப்போது, நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி, சாலைகளை சரிசெய்ய முடிவானது.அதன்படி, கோயம்பேடு, கொளத்துார், அண்ணா சாலை, தாம்பரம், சோழிங்கநல்லுார், சேலையூர், தரமணி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில், சாலைகளை செப்பனிடும் பணி நடந்து வருகிறது.
சென்னை தரமணி முதல் பெருங்குடி வரை நடந்து வரும் சாலை சீரமைப்பு பணிகளை, அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதிக்கப் பட்ட அனைத்து சாலை பணிகளையும், விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
சில நாட்களில் சாலைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-202113:26:26 IST Report Abuse
RajanRajan இன்னாது சாலைகளை செப்பனிடணுமா. அதெப்படி விரைவாக. வேணும்னா செப்பனிட்டாச்சுன்னு இன்னிக்கே செலவு கணக்கு எழுதி நிதியை கழிச்சுடுவோம். உழைப்பு என்பதெல்லாம் இந்த டாஸ்மாக் காலத்துலே எப்படி விடியல் அண்ணா. நம்ம பாணியை மட்டும் மாத்த சொல்லாதீங்க. தண்ணீர் வரும் கொஞ்ச பேர் சாவாங்க அவுங்களுக்கு ஒரு இழப்பீடு அப்புறம் மத்திய அரசு துட்டு வரலன்னு ஒரு அஞ்சு வர்சத்தை ஒட்டி விட்டு மறுபாதி ஒரு படா தேர்தல் அறிக்கை விட்டு ஆட்சி அதிகாரம்னு கும்மியடிச்சுக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X