தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

Added : டிச 04, 2021
Share
Advertisement
ஐதராபாத்:தமிழக முன்னாள் கவர்னரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா, 88, உடல் நலக்குறைவால் காலமானார்.ஆந்திராவில் எம்.எல்.சி., ஆக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கியவர் ரோசய்யா. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர்.கடந்த 2009ல் ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக ரோசய்யா பதவி
 தமிழக முன்னாள் கவர்னர்  ரோசய்யா காலமானார்

ஐதராபாத்:தமிழக முன்னாள் கவர்னரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா, 88, உடல் நலக்குறைவால் காலமானார்.
ஆந்திராவில் எம்.எல்.சி., ஆக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கியவர் ரோசய்யா. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர்.கடந்த 2009ல் ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக ரோசய்யா பதவி ஏற்றார். எனினும் 2010 நவம்பர் வரை மட்டுமே அப்பதவியில் ரோசய்யா நீடித்தார்.
காங்கிரஸ் கட்சியில் அதிகாரமிக்க தலைவராக வலம் வந்த இவர், 2011 - 2016 வரை தமிழக கவர்னராக பதவி வகித்தார். இதற்கிடையே 2014ல் சில மாதங்களுக்கு, கர்நாடக மாநில கவர்னராகவும் இவர் பொறுப்பு வகித்தார்.
இதன்பின், தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற ரோசய்யா, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
ரோசய்யாவின் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X