ஜீவாவின் பேரனுக்கு போக்கு காட்டும் அதிகாரிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஜீவாவின் பேரனுக்கு 'போக்கு' காட்டும் அதிகாரிகள்!

Added : டிச 04, 2021 | கருத்துகள் (2) | |
ஜீவாவின் பேரனுக்கு 'போக்கு' காட்டும் அதிகாரிகள்!''இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு... இன்னும் பாருங்க, பல காமெடிகள் நடக்கும்...'' என, யாரிடமோ போனில் பேசி, 'கட்' செய்தபடியே கடைக்குள் வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''டில்லியில தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக ராஜேஷ்குமார் பதவியேற்கும் போது, 'வெல்க அண்ணன் உதயநிதி'ன்னு கோஷமிட்டாருல்ல... சபாநாயகர் வெங்கையா நாயுடு,

 டீ கடை பெஞ்ச்


ஜீவாவின் பேரனுக்கு 'போக்கு' காட்டும் அதிகாரிகள்!



''இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு... இன்னும் பாருங்க, பல காமெடிகள் நடக்கும்...'' என, யாரிடமோ போனில் பேசி, 'கட்' செய்தபடியே கடைக்குள் வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''டில்லியில தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக ராஜேஷ்குமார் பதவியேற்கும் போது, 'வெல்க அண்ணன் உதயநிதி'ன்னு கோஷமிட்டாருல்ல... சபாநாயகர் வெங்கையா நாயுடு, 'இந்த கோஷமெல்லாம் அவைக் குறிப்பில் இடம் பெறாது'ன்னு சொல்லிட்டாருங்க...

''இது ஒரு பக்கம் இருக்க, அமைச்சர் மகேஷ், 'மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை, ஒரு தொகுதியில சுருங்கக் கூடாது... அவரும் அமைச்சராகணும்'னு சொல்லியிருக்காருங்க...

''இதை எல்லாம், சமூக வலைதளங்கள்ல, 'தாத்தா, மகன், பேரன்... அடுத்து கொள்ளு பேரனுக்கும் கொடி பிடிக்கிறது தான், சமூகநீதியா?'ன்னு கிண்டல் பண்ணுறாங்க...

''அதுலயும் சிலர், 'அ.தி.மு.க.,வுலயாவது ஜெயலலிதாவுக்கு அடிமை போல இருந்தாங்க... ஆனா, தி.மு.க.,வுல ஒரு குடும்பத்துக்கே அடிமையா வாழுறாங்க'ன்னு, சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''முன்னாள் முதல்வர் தொகுதியில ரொம்ப கெடுபிடி காட்டுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''ஏதும் அரசியல் காரணமா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''அது தெரியலை... சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சியில 30 வார்டுகள் இருக்கு... 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறாங்க... அங்கே, விசைத்தறி தொழில் தான் பிரதானம் பா...

''இடைப்பாடி நகராட்சியில, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு வரி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு, 3,000க்கும் மேற்பட்ட தொழில் வரி கணக்குகள் இருக்குது...

''அதுல உள்ள பாக்கியை உடனே செலுத்தணும்னு வலியுறுத்தி, நகராட்சி பணியாளர்கள் ஒரு வாரமா தீவிர வசூல்ல ஈடுபட்டுட்டு வர்றாங்க...

''கொரோனாவால் விசைத்தறி தொழில் நீண்ட நாளா பாதிக்கப்பட்டு இருக்கு... இப்ப தான் நிலைமை ஓரளவு சீராகி வருது... இப்ப போய் வரியை செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்களேன்னு, அப்பகுதி மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தமிழக ஆட்சி நிர்வாகத்துக்கு இது ஓர் உதாரணம் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு முன்னுரை தந்தார் குப்பண்ணா.

''என்ன, ஏதுன்னு விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் பேரன், ஒரு மாற்றுத் திறனாளி... அவர், முதல்வர் ஸ்டாலினை சந்திச்சு, வேலை கேட்டு மனு கொடுத்தார் ஓய்...

''முதல்வரும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில வேலை போட்டுக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்... ஆனா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில வேலை கொடுக்காம, அவரது மனுவை பள்ளிக்கல்வி துறைக்கு தள்ளி விட்டுட்டா ஓய்...

''அந்த துறை அதிகாரிகளும், ஜீவாவின் பேரனுக்கு என்ன வேலை கொடுக்கறதுன்னு தெரியாம, கையை பிசைஞ்சுண்டு இருக்கா... விளையாட்டு வீரர் யாருக்காவது வேலை கொடுங்கோன்னு முதல்வர் உத்தரவிட்டதும், உடனே செயல்படுத்தற அதிகாரிகள், கம்யூ., தலைவரின் பேரனுக்கு மட்டும் ஏன் 'போக்கு' காட்டறான்னு, கட்சிக்காராள்லாம் கேள்வி எழுப்பறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

**************


ரூ.4 கோடிக்கு டெண்டர் எடுத்த அ.தி.மு.க., புள்ளி!



''ஒரு குடும்பத்துக்கே எல்லா பதவிகளும் போயிட்டா, கட்சிக்கு உழைச்சவாளுக்கு என்ன தான் மிஞ்சும்கறேன்...'' எனக் கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார்
குப்பண்ணா.

''தி.மு.க., தரப்பு தகவலாங்க...'' என்று 'பட்'டென கேட்டார் அந்தோணிசாமி.

''ஆமாம்... சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலராவும் இருக்கார்... வரப் போற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு, தன் குடும்ப உறுப்பினர் ஒருத்தரை நிறுத்த முடிவு செஞ்சு, அதுக்கான பூர்வாங்க பணிகளையும் துவங்கிட்டார் ஓய்...

''பல வருஷங்களா கட்சிக்கு உழைச்சு ஓடாய் தேய்ஞ்ச பலர், இந்தப் பதவிக்காக காத்துண்டு இருக்கறச்சே, ஒரு குடும்பமே எல்லா பதவிகளையும் வாரிண்டு போயிட்டா என்ன அர்த்தம்னு, தி.மு.க.,வினர்
புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆள் போட்டு வசூல் பண்ணுதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சேலம் மாவட்டத்துல 210 டாஸ்மாக் கடைகள் இருக்குது... டாஸ்மாக் தி.முக., தொழிற்சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதியிலயும், சில கடை மேற்பார்வையாளர்களை புரோக்கர்களா போட்டு, 'அதிகாரிகளுக்கு கொடுக்கணும்... கட்சி நிர்வாகிகளுக்கு தரணும்'னு மாசா மாசம் கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் பண்ணிடுதாவ வே...

''இதனால, நொந்து போன கடை விற்பனையாளர்கள், தங்களிடம் பணம் வசூல் செய்யற தொழிற்சங்க நிர்வாகிகள், புரோக்கர்கள் பெயர்களை குறிப்பிட்டு, முதல்வர் தனிப்பிரிவுக்கும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கும் புகார்கள் அனுப்பியிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஆட்சி மாறியும், 4 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துட்டாரு பா...'' என, கடைசி தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க.,வுல சின்ன பொறுப்புல இருக்கிற ஒருத்தர், மாவட்ட பொதுப்பணி துறை அதிகாரி தயவுல, போன வருஷம் 7 கோடி ரூபாய்க்கு வெள்ள நிவாரண பணிகளை டெண்டர் எடுத்து செய்தாரு பா...

''ஆட்சி மாறிய நிலையில, அதே அதிகாரி சிபாரிசுல இந்த வருஷம், 3 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துட்டார்... இது தெரிஞ்சதும், ஆளுங்கட்சியினர், 'எதிர்க்கட்சி புள்ளிக்கு எப்படி வேலை தரலாம்'னு, அதிகாரியிடம் சண்டைக்கு போனாங்க...

''இதனால, அ.தி.மு.க., புள்ளி, 'ரூட்'டை மாத்தி மேலும் ௧ கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுக்க, வேலுார் மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரி ஒருத்தரை பிடிச்சுட்டார்... அவர் மூலமா, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர் தயவுல, இப்ப காரியத்தை நிறைவேத்திக்கிட்டாருபா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''வெங்கடேஷ் பாபுவுக்கு, திலகமும், ரமேஷும் ரொம்பவே ஒத்தாசையா இருக்கா போங்கோ...'' என, யாரிடமோ மொபைல் போனில் குப்பண்ணா பேசி கொண்டிருக்க, நண்பர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X