பொது செய்தி

இந்தியா

'ஒமைக்ரான்' ஆராய்ச்சி அவசியம்: அரசுக்கு பார்லி., குழு பரிந்துரை

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021
Share
Advertisement
புதுடில்லி ;'உருமாறியுள்ள 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,' என, மத்திய அரசுக்கு, சுகாதார துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. எச்சரிக்கை புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு நம் நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது.
'ஒமைக்ரான்', ஆராய்ச்சி, அவசியம்,  பார்லி., குழு, பரிந்துரை

புதுடில்லி ;'உருமாறியுள்ள 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,' என, மத்திய அரசுக்கு, சுகாதார துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.


எச்சரிக்கை



latest tamil news



புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு நம் நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது. 'இது மிகவும் வேகமாக பரவக் கூடியது; தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது' என, பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.இந்நிலையில் சுகாதார துறைக்கான பார்லி., நிலைக்குழு, மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 2020 செப்டம்பரில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் முதல் அலை பாதிப்பு தீவிரமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்தாண்டு மே மாதத்தில் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியது.இரண்டுக்கும் இடையே, ஆறு மாதங்கள் இடைவெளி இருந்தும் சுகாதார வசதிகள் அதிகரிக்கப்படவில்லை.தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் நம் நாட்டில் மூன்றாம் அலை பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவையான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தற்போது முழு கவனம் செலுத்த வேண்டும்.முதல் அலையில் பெருநகர் பகுதிகளில் பாதிப்பு இருந்தது. அதனால் நகர் பகுதிகளில் பரிசோதனைகள் செய்யப்பட்டன.


பரிசோதனை



அதே நேரத்தில் இரண்டாவது அலை, சிறு நகரங்கள் உட்பட கிராம பகுதிகளை தாக்கியது. அதனால் நாடு முழுதுக்குமான விரிவான பரிசோதனை வசதிகள் செய்யப்பட வேண்டும்.கொரோனா வைரஸ் மேலும் பல வகைகளில் உருமாறி அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மேலும், தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த வகை கொரோனா வைரசுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தடுப்பூசிகள் வழங்கும் பணியை மேலும் விரைவுபடுத்த வேண்டும். 'பூஸ்டர்' எனப்படும் மூன்றாவது, 'டோஸ்' தடுப்பூசி தேவையா என்பது குறித்த ஆய்வும் செய்யப்பட வேண்டும்.
வெளிநாட்டு பயணியருக்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நாடு முழுதும் பரிசோதனை செய்யும் வசதி விரிவுபடுத்த வேண்டும். பாதிப்பைவிட பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X