சென்னையில் கொரோனா அதிகரிப்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி : தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.தமிழகத்தில் சென்னை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. கவலையளிக்கிறதுமாநில மற்றும் யூனியன் பிரதேச
சென்னை, கொரோனா அதிகரிப்பு, தமிழக அரசு, மத்திய அரசு கடிதம்

புதுடில்லி : தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.


தமிழகத்தில் சென்னை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.


கவலையளிக்கிறது



மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
கர்நாடகாவில் பெங்க ளூரு, மைசூரூ, தர்வாத் ஆகிய பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலுார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ௩ம் தேதியுடன் முடிந்த ஒரு மாதத்தில் மட்டும் ௨௩ ஆயிரத்து ௭௬௪ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கேரளாவில் தான் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. டிசம்பர் ௩ம் தேதியுடன் முடிந்த ஒரு மாதத்தில் நாடு முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் ௫௫ சதவீதத்துக்கும் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.


ஆபத்தாகி விடும்



ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் ௪,௮௬௨ பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.ஒடிசாவில் கடந்த வாரத்தில் ஆறு மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமின் அய்ஸ்வால் மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிடவில்லை. இப்போது உருமாறிய 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே தொற்று பரவலை தடுப்பதில் சிறிய அலட்சியம் காட்டப்பட்டாலும், அது ஆபத்தாகி விடும்.தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களிலேயே பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202109:01:04 IST Report Abuse
theruvasagan கோயில்ல கூட்டம் சேர்ந்தா கெரோனா ஒட்டிக்கும். ஆனா தியேட்டர்ல 3 மணி நேரம் கூட்டமா அடைஞ்சு படம் பாத்தா கெரோனா குய்யோ முய்யோன்னு கதறி பயந்து வெளியில ஓடிடும். எங்க கோவிட் கொண்டான்களின் சரித்திர பூகோள கணித விஞ்ஞான பூர்வமான கண்டுபிடிப்பு. டாஸ்மாக் இன்னும் ஒருபடி மேல. அங்க போனாலும் சரக்கு போட்டாலும் மட்டையாகி ரோடுல விழுந்தாலும் ஒண்ணுமே ஆகாது. ஏன்னா அதுதான் சர்வரோக நிவாரணி. நம்பர் ஒன் நோய் எதிரப்பு சக்தி பூஸ்டர். அதனாலதான் தடுப்பூசிக்கு இல்லாத மகத்துவம் டாஸ்மாக் சரக்குல இருக்குன்னு நம்புறவங்க அதுக்கு தட்டுப்பாடே வராதபடி பாத்துகிறாங்க. கெரோனா பாதிக்குமேன்னு என்னிக்கும் ஒரு துளி கூட கவலைப்பட மாட்டான். ஆனா சரக்கடிக்கலைன்னா தண்ணிக்கு வெளிய விழுந்த மீன் மாதிரி துடிச்சுப் போயிடுவான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202107:33:26 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக அரசு தமிழகத்தில் கோவிட்19 ஐ வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்கிறது...
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-202109:03:57 IST Report Abuse
RajanRajanஇல்லாததை சொல்லி வானத்திலே பூ பறிப்போம்னு கூவி பொழப்பு நடத்துறது தானே விடியல் ஆட்சி....
Rate this:
Cancel
05-டிச-202106:50:20 IST Report Abuse
அப்புசாமி அண்ணாச்சிக்கும் ஒரு எச்சரிக்கை காப்பி அனுப்பி வையுங்க. கோவில் தெறக்கலேன்னா போராட்டம் நடத்துறாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X