மாரடைப்பால் 54 போலீசார் இறப்பு: மன அழுத்தம் காரணமா?

Updated : டிச 06, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (7)
Advertisement
காவல் துறையில் இந்தாண்டு 54 போலீசார் மாரடைப்பால் இறந்துள்ளனர். இதற்கு 'பணி அழுத்தத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே' காரணம் என, சக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.தமிழக காவல் துறையில் 'கான்ஸ்டபிள்' முதல் டி.ஜி.பி., வரை அனைத்து பதவிகளிலும் பணி அழுத்தம் தவிர்க்க முடியாதது. அதிகாரிகள் தங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை தங்களுக்கு கீழ் உள்ள போலீசாரிடம் திணிக்கின்றனர். இதனால் பல
மாரடைபு, 54 போலீசார் இறப்பு: மன அழுத்தம் காரணமா?

காவல் துறையில் இந்தாண்டு 54 போலீசார் மாரடைப்பால் இறந்துள்ளனர். இதற்கு 'பணி அழுத்தத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே' காரணம் என, சக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.தமிழக காவல் துறையில் 'கான்ஸ்டபிள்' முதல் டி.ஜி.பி., வரை அனைத்து பதவிகளிலும் பணி அழுத்தம் தவிர்க்க முடியாதது. அதிகாரிகள் தங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை தங்களுக்கு கீழ் உள்ள போலீசாரிடம் திணிக்கின்றனர்.

இதனால் பல போலீசார் மன அழுத்தத்திற்குள்ளாகி ஓய்வு பெறும் முன்பே இறந்துவிடுகின்றனர். தவிர முறையற்ற பணி நேரம், நீண்டநேரம் பாதுகாப்பு பணியால் உணவு உட்கொள்வதில் தாமதம், கிடைத்த உணவை சாப்பிடுவது என, நோய்வாய்ப் படுகின்றனர். போலீசார் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தாலும் அதை கண்டுகொள்ளாததால் இறப்புக்கு ஆளாகின்றனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 54 போலீசார் மாரடைப்பால் இறந்துள்ளனர்.
இதற்கு பணி அழுத்தமே காரணம் என சக போலீசார் கூறினாலும், தங்கள் உடல் நலத்தை முன்கூட்டியே கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததே காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
போலீசாருக்கு பணியினால் மட்டும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. அதற்கு குடும்பம் உட்பட பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு போலீசும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். தவிர சுயகட்டுப்பாடு அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
06-டிச-202111:32:40 IST Report Abuse
KMP I request our police dept. to give a foundation course at temple of consciousness for all police people. my suggestion so that we save many police people from suiciding and other mind related issues. be blessed by the divine.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-டிச-202122:02:32 IST Report Abuse
sankaseshan போலீஸ்காரரும் மனிதர்கள் தான் விடுமுறையில்லாமல் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது மேல் அதிகாரிகளின் தொந்தரவு வேலைப்பளு மனா அழுத்தத்தை தருகிறது அவர்களுடைய கோரிக்கைகளில் கவனிக்க படவேண்டும் அல்போன்சு கொஞ்ச நாட்கள் போலீசில் பணிசெய்தால் அவர்கள் கஷ்டம் புரியும்
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-202109:01:56 IST Report Abuse
Jai உடம்பு கட்டுக்கோப்பாக இருக்கும் போலீஸாருக்கு அலவன்ஸ் கொடுத்தால் அனைத்து போலீஸர்களும் கட்டுக்கோப்பாக இருக்க முயற்சி செய்வர். கடைகளில் இலவசமாக போன்டா பஜ்ஜி சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்வர்.
Rate this:
05-டிச-202117:20:48 IST Report Abuse
Vittalanandஅதே அதே காரணம். காக்காய் கறி பியணியை தெருவோர கடையில் லவட்டி சாப்பிடுவது தான் காரணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X