ராமநாதபுரம்--ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூர், நயினார்கோவில் ரோட்டில் செல்லும் வெள்ளநீரில் காவனுார் அருகே பாலம் மூழ்கியுள்ளதால், அவ்வழியாக 2வதுநாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.ராமநாதபுரத்திற்கு கடந்த சிலநாட்களாக வைகை ஆற்றுதண்ணீர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கனஅடி வரை வருகிறது. பார்த்திபனுாரிலிருந்து பரளை, இடது, வலது பிரதான கால்வாய்களுக்கு திறந்தது போக ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் பெரியகண்மாய் பாசன வாய்க்கால் வழியாக 4ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. கார்குடி பெரியகண்மாய்தலைமதகு பகுதியில்இருந்து திருப்பி விடப்பட்ட உபநீர் தொருவளூர்,ஆர்.காவனுார், கார்குடி, முதலுார் காவனுார், காரேந்தல், மென்னாந்தி உள்ளிட்ட ஊர்களில் புகுந்து விளைநிலங்கள், அருகேயுள்ள வீடுகளில் சூழ்ந்தது. 2வது நாளாக போக்குவரத்து பாதிப்பு: ராமநாதபுரத்தில்இலிருந்து பாண்டியூர், நயினார்கோவில் செல்லும் மெயின்ரோட்டில் காவனுார் அருகே பாலத்தை மூழ்கி ஆற்றுவெள்ளம் செல்கிறது. இதனால் அவ்வழியாக 2 நாட்களாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று தடையை மீறி வந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை கார்குடிவழியாக திருப்பிவிட்டனர். இதனால் நீண்டதுாரம் சுற்றிவந்து மக்கள் சிரமப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE