காங்.,கை கழற்றி விடுவது ஆபத்து: மம்தாவுக்கு சிவசேனா எச்சரிக்கை

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை-'காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க முயற்சிப்பது, மதவாத சக்திகளுக்கு மேலும் சாதகமாக அமைந்துவிடும். முதலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை தேவை' என, சிவசேனா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலையங்கம்மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து
காங்கிரஸ், கழற்றி விடுவது, ஆபத்து, மம்தா, சிவசேனா, எச்சரிக்கை

மும்பை-'காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க முயற்சிப்பது, மதவாத சக்திகளுக்கு மேலும் சாதகமாக அமைந்துவிடும். முதலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை தேவை' என, சிவசேனா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலையங்கம்

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தேசிய அளவில் புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டார்.

இது தொடர்பாக பல எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். மும்பையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவர் சந்தித்து பேசினார். அப்போது 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது தற்போது மறைந்துவிட்டது' என்றார்.

இது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:காங்கிரசை அழித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது.


latest tamil news




எதிர்கால திட்டம்

இந்நிலையில் அதை முழுமையாக குழியில் தள்ளி அதில் வளர வேண்டும் என பிறர் நினைப்பது சரியானதல்ல.காங்கிரசை எதிர்த்து செயல்படுவது என்பது பா.ஜ., மற்றும் மதவாத சக்திகளுக்கு வலுவூட்டு வதாகவே அமைந்துவிடும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியே, பா.ஜ.,வை தேசிய அளவில் எதிர்ப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு. காங்கிரஸ் தலைமையில் சந்திக்க விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பல கருத்துக்களை தெரிவித்து குழப்பக் கூடாது.

எதிர்க்கட்சிகள் இடையே முதலில் ஒற்றுமை வேண்டும். அதன்பின் யார் தலைமை தாங்குவது என்பது குறித்து யோசிக்கலாம். காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் தங்கள் நிலை என்ன, எதிர்கால திட்டம் என்ன என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
05-டிச-202114:39:27 IST Report Abuse
A.Gomathinayagam காங்கிரஸ் இன்று பலம் இழந்தாலும் கன்னியாகுமரி ,முதல் காஷ்மீர் வரை அணைத்து கிராமங்களில் கூடபரவியிருப்பது இந்தியாவில் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே .அதை தவிர்த்து கூட்டணி அமைதாள் தோல்வி நிச்சயம் .தென் மாநிலங்களில் அதற்கு குறிப்பிட்ட செல்வாக்கு இன்றும் தொடர்கிறது
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ஆமாம் ரத்த புற்றுநோயோடு ஒப்பிடலாம் உள்ளிருந்தே கொல்லும் "திறன்" கொண்டது...
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
05-டிச-202113:54:54 IST Report Abuse
N. Srinivasan இப்போதே உங்கள் எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து மோடிஜியை தோற்க அடித்து வெற்றி பெற்றால் நீங்கள் எல்லோரும் எப்படி இருப்பீர்கள்? போடுங்கள் போடுங்கள் நன்றாக சண்டை போடுங்கள் அப்போது தான் உங்கள் எல்லாரையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
05-டிச-202113:48:39 IST Report Abuse
canchi ravi ஒரு காலத்தில் காங்கிரஸ் எதிரி. இப்பொழுது பதிவை தக்கவைத்துக்கொள்ள நல்ல டயலாக்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X