மூன்று மொபைல் போன்கள் வைத்திருக்கும் எம்.பி.க்கள்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களைப் பார்த்து சக எம்.பி.,க்கள் கிண்டலடிக்கின்றனர்.இந்த புதிய எம்.பி.,க்கள் ஒவ்வொருவருமே தலா மூன்று மொபைல் போன்களை வைத்துள்ளனர். சபைக்கு வரும் போது கையில் ஒன்று, பாக்கெட்டில் இரண்டு என பார்க்கவே ஒரு தினுசாக இருக்கிறது. சபைக்குள் இந்த போன்களை எடுத்துச் செல்ல இவர்கள் படும் பாடு வேடிக்கையாக

புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களைப் பார்த்து சக எம்.பி.,க்கள் கிண்டலடிக்கின்றனர்.latest tamil news


இந்த புதிய எம்.பி.,க்கள் ஒவ்வொருவருமே தலா மூன்று மொபைல் போன்களை வைத்துள்ளனர். சபைக்கு வரும் போது கையில் ஒன்று, பாக்கெட்டில் இரண்டு என பார்க்கவே ஒரு தினுசாக இருக்கிறது. சபைக்குள் இந்த போன்களை எடுத்துச் செல்ல இவர்கள் படும் பாடு வேடிக்கையாக இருக்கும்.

இந்த மொபைல் போன்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வரும்போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. ஒரு போனை கட்சிக்காரர்களுக்கும், இரண்டாவது போனை சொந்த விஷயங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது போனில் உதயநிதியின் அழைப்புகள் மட்டுமே வருகின்றன.


latest tamil news


உதயநிதி மீது ரொம்பவே பாசமாக இருக்கும் இவர்கள் சபையிலும் உதயநிதி வாழ்க என சொல்லி குட்டு வாங்கினர். சில சீனியர் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு இவர்களது நடவடிக்கை பிடிக்கவில்லை. 'சபைக்கு வெளியே என்ன வேண்டு மானாலும் கோஷம் போடலாம். பார்லிமென்டிற்கு என சில மரியாதை, விதிமுறைகள் உள்ளன. அதை கடைப்பிடிக்க வேண்டாமா' என, அவர்கள் வருத்தப்படுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
05-டிச-202112:30:45 IST Report Abuse
SUBBU இரண்டு கைகளில் இரண்டு வாட்ச் கட்டுபவர்களுக்கு மூன்று மொபைல் போன்கள் வைத்து கொள்வது என்பது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல.
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-202112:30:02 IST Report Abuse
Sathya They got their position because of him. What else you expect. Reminds me movie character in Thaniyouruvan. Day time beggars
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
05-டிச-202110:43:07 IST Report Abuse
pattikkaattaan மொபைல் போன் வைத்திருப்பது தவறல்ல ... அவையில் அமர்ந்துகொண்டு அதில் பலான படங்கள் பார்த்து சிலர் சிக்கினார்களே.. அதுதான் கேவலம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X