பொது செய்தி

இந்தியா

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.38,000 கோடியை எட்டியது: ராஜ்நாத் சிங்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி-''கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, 38 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.டில்லியில் ராணுவ தளவாட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:பிரதமர்

புதுடில்லி-''கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, 38 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



latest tamil news


டில்லியில் ராணுவ தளவாட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால்,12 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 38 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. விரைவில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மதிப்பை விட, ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும்.சிறிய அளவில் செயல்படுவதால் நம்மால் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாது என, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எண்ணக் கூடாது.


latest tamil news


புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பொருட்களையும் உருவாக்க வேண்டும். வரும் 2024 - 25ம் நிதியாண்டில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை 35ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 70 நாடுகளுக்கு நம் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக உலகளவில் 'டாப்' 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202117:55:23 IST Report Abuse
J.V. Iyer பாராட்டுக்கள். பாஜகவினால் எதையும் சாதிக்கமுடியும். காங்கிரஸ் வெட்கி தலைகுனியவேண்டும். ஆனால் அவர்களுக்கு வெட்கம் கிடையாதே
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
05-டிச-202117:27:47 IST Report Abuse
Kumar விரைவில் 38 லட்சம் கோடியாக மாறவேண்டும்.பெரியண்ணன் ஆனால் என்ன? தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உற்பத்தி தொழில்சாலைகள் வட மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது இங்குள்ள கூலிபான்களால். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
05-டிச-202116:30:42 IST Report Abuse
அப்புசாமி நாடு எங்கேயோ போகப் போகுது தல. எங்கேதான்னு தெரியலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X