பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, : 'தமிழகத்தின் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி மற்றும்
13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, : 'தமிழகத்தின் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை, வட கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.


latest tamil news




நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிஉள்ள மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை, வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 32, குறைந்தபட்ச வெப்ப நிலை,
24 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி; நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் 8; சேலம் மாவட்டம் மேட்டூரில் 7; கரூரில் 6; நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதியில் தலா 5; நாகர்கோவில், சிவகாசியில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கைமத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, ஒடிசா
கடற்கரையோரம் நிலைகொள்ளும்.இதன் காரணமாக, இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில், புயல் காற்று மணிக்கு, 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசலாம். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-டிச-202108:36:28 IST Report Abuse
DARMHAR வருண பகவானுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.இவ்வாறு அடிக்கடி அபரிமிதமாக மழை பொழிய
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X