பொது செய்தி

இந்தியா

முக கவசம் அணிவதில் இந்தியர்கள் அலட்சியம்: ஆய்வில் தகவல்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றான முக கவசம் அணியும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து விட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற வலைதள ஆய்வு நிறுவனம் 364 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் தபாரியா

புதுடில்லி-இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றான முக கவசம் அணியும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து விட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.latest tamil news


'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற வலைதள ஆய்வு நிறுவனம் 364 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறியதாவது:கொரோனா பரவலை தடுப்பதில் முக கவசமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் அறையில் முக கவசம் அணியாமல் இருவர் இருந்தால், 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு பரவி விடும் ஆபத்து உள்ளது.


latest tamil news


அதேநேரத்தில் 'என்-95' முக கவசம் அணிந்திருந்தால் வைரஸ் பரவ 600 மணி நேரமாகும். நாங்கள் நடத்திய ஆய்வின் போது, வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். இது, செப்டம்பரில் 12 சதவீதமாக குறைந்து, நவம்பரில் 2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் முக கவசம் அணிவதை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202116:28:38 IST Report Abuse
அப்புசாமி என் 95 முக கவசம் வாங்கியே ஏழையா போயிடுவோம்.
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
05-டிச-202114:53:09 IST Report Abuse
ராம.ராசு முகக் கவசம் மட்டுமே தொற்று பரவலுக்கு தடையாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பே சொன்னது. காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு, அது மனிதர்களுக்குத் தேவையானதை உள்வாங்கும் மூக்கின் அமைப்பு. முகக் கவசம் போட்டுக்கொள்வதால் ஆக்சிஜன் அளவு தேவைக்குக் குறைவாகவே கிடைக்கும். தவிர தொற்று என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எத்தனை முகக் கவசம் போட்டுக்கொண்டாலும் தடுக்க முடியாது. முகக் கவசம் அணிவதால், உள்வாங்கும் காற்று குறைவாக இருப்பதால், போதுமான ஆக்சிஜன் உடலுக்குக் கிடைக்காது... மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதே போல அதிக நேரம் அணித்து இருந்துவிட்டு அதை முகத்தை விட்டு அகற்றும்போது, திடீரென அதிகப்படியான காற்று உள் இழுக்கப்படுவதால் அப்போதும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். தொற்று உட்பட வெளிப்புற மாசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைப்பை இயற்க்கையாகவே மூக்குக்குள் உண்டு. முகக் கவசம் அணிந்து காற்றைத் தடைபோடும்போது, மாசுக்களை, தொற்றை தடுப்பதற்கான இயற்க்கை அமைப்பு தடைபட்டுப் போகும். காலப்போக்கில் மிகக் கவசம் இல்லாமல் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடலாம். ஆறறிவு கொண்ட மனிதர்கள். உடலே ஒரு மருத்துவர் என்பதை மறந்து, "உணவே மருந்து" என்ற நிலையை மறந்து, "மருந்தே உணவாக" வாழும் நிலைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டுள்ளோம். . உடல் தனக்குத் தேவையானதை தானே கேட்கும். அதை புரிந்துகொள்வதற்கு நம்மில் பலரும் தயாராக இல்லை. மதம். மருத்துவ முறை. உணவு முறை. இம்மூன்றும் தனிப்பட்டவர்களின் விருப்பைச் சேர்ந்தது. அவைகளை மக்கள் பெறுவதற்கான வழி வகைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின், ஆள்பவர்களின் கடமையாக இருக்க வேண்டும். முழுசாக மூச்சுவிடக் கூட முடியாத நிலை. மேலும் மனிதர்களுக்கு உடல் பாதிப்பையே கொடுக்கும். இறைவன் கொடுத்த அருமையான மூச்சு விடுவதற்கான அமைப்பை முழுதாகப் பயன்படுத்துவதில்தான் ஆரோக்கியமே.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
05-டிச-202111:40:14 IST Report Abuse
Apposthalan samlin ஈராக் இல் ஒருத்தரும் மாஸ்க் அணிவதில்லை அணிந்தாலும் கேவலமாக பார்க்கிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X