பொது செய்தி

இந்தியா

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது ‛ஜாவத்' புயல்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021
Share
Advertisement
புவனேஷ்வர்-ஒடிசாவை நோக்கி நகர்ந்து வந்த, 'ஜாவத்' புயல், நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுவிழந்தது.மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது.இதற்கு, 'ஜாவத்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை

புவனேஷ்வர்-ஒடிசாவை நோக்கி நகர்ந்து வந்த, 'ஜாவத்' புயல், நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுவிழந்தது.மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது.



latest tamil news


இதற்கு, 'ஜாவத்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கின.கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த ஜாவத் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுவிழந்தது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:ஒடிசாவின் கடலோரத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வந்த ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது விசாகப்பட்டினத்தில் இருந்து, 180 கி.மீ., தொலைவிலும், புரியில் இருந்து 330 கி.மீ., தொலைவிலும் தற்போது நிலைகொண்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதற்கிடையே, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.276 கர்ப்பிணியர் மீட்புஒடிசாவில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அந்த பணியின்போது 276 கர்ப்பிணியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X