பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரான் இந்தியாவில் ஏற்கனவே பரவியுள்ளது: அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-'வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு முன்பே இந்தியாவில் ஒமைக்ரான் பரவியுள்ளது' என, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.தனியார் 'டிவி' சேனல் ஒன்றுக்கு சி.எஸ் ஐ.ஆர்., தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் முதலில்

புதுடில்லி-'வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு முன்பே இந்தியாவில் ஒமைக்ரான் பரவியுள்ளது' என, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.latest tamil news


தனியார் 'டிவி' சேனல் ஒன்றுக்கு சி.எஸ் ஐ.ஆர்., தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது என்றும், அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே சிலரிடம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எந்த வெளிநாடுக்கும் செல்லாதவர்கள். பல முக்கிய நகரங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கலாம். எனினும் ஒமைக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலான விஷயம்.


latest tamil news


இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு 'ஹெல்மெட்' அணிவது எப்படி முக்கியமோ, அதேபோல தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.ஹெல்மெட் அணிந்திருந்தாலும் விபத்து ஏற்படலாம். அதுபோல் தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்றால் பாதிக்கப்படலாம். ஆனால் இரண்டுமே உயிரை பாதுகாக்கும் சாதனங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
05-டிச-202119:03:30 IST Report Abuse
jagan அடுத்து EVERGRANDE எனும் சீன ரியல் எஸ்டேட் கம்பெனி மூழ்க போகுது. சீனாவின் அடுத்த வைரஸ் Financial market இது COVID 19 விட மோசமான பொரரூளாதார விளைவை உண்டாக்கும். ஸ்டாக் மார்க்கெட் முதலீடு ஜாக்கிரதை. பிப்ரவரி 2022 வரை சீன அரசு வெளிவராமல் பார்த்து கொல்லும் என்று நினைக்கிறன்
Rate this:
Cancel
05-டிச-202116:26:39 IST Report Abuse
அப்புசாமி நமது ஆத்மநிர்பரா கொள்கைப் படி ஓமிக்ரான் வெளிநாட்டிலிருந்து வரத் தேவையில்லை. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாமே தயாரிச்சுப்போம்.
Rate this:
Cancel
05-டிச-202112:38:07 IST Report Abuse
ஆரூர் ரங் இது அச்சப்பட வேண்டிய உருமாற்றம் அல்ல. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எல்லோருக்கும் பெரிய நோய் அறிகுறிகள் வராமலே தானாக🤫 சரியாகிவிடும். செயற்கையாக அச்சமூட்ட வேண்டாமே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X