புதுடில்லி-கர்நாடகாவில் ஏற்கனவே இரண்டு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கும், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. 'இது மிகவும் ஆபத்தானது; வேகமாக பரவக் கூடியது' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பல நாடுகளும் விமானப் பயணியருக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.நம் நாட்டில் இதுவரை இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, 46 வயது டாக்டருக்கு இந்த புதிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாத அவருக்கு லேசான காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் மட்டுமே இருந்தன.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, 66 வயது பயணி, பெங்களூரு வந்தபோது, அவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது.இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த, 72 வயது நபர், சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.மரபணு பகுப்பாய்வு பரிசோதனை நடத்தியதில், அவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நம் நாட்டில் இதுவரை மூன்று பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகிஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE