பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: குள்ளநரிகளின் ஜாதி தந்திரம்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என நம் முன்னோர் அனைவரும் ஒழிக்க முனைந்தது, ஜாதியைத் தான். ஆனாலும் நம் நாட்டில், அந்தக் கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை!கடந்த 1991ல், உ.பி., மாநிலத்தில் ஒரு காதல் ஜோடி இணைய, நண்பர்
இது, உங்கள், இடம், ஜாதி கணக்கெடுப்பு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என நம் முன்னோர் அனைவரும் ஒழிக்க முனைந்தது, ஜாதியைத் தான். ஆனாலும் நம் நாட்டில், அந்தக் கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை!கடந்த 1991ல், உ.பி., மாநிலத்தில் ஒரு காதல் ஜோடி இணைய, நண்பர் ஒருவர் உதவினாராம். சம்பந்தப்பட்ட மூவரையும், ஆணவக் கொலை செய்து விட்டனர், இரு வீட்டாரும்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேருக்கு துாக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

மேல்முறையீட்டில் அலாகாபாத் உயர்நீதி மன்றமோ, துாக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.அதிலும் மேல் முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. அலாகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்திய நீதிபதிகள், நாடு சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளாகியும் இன்னும் ஜாதிக் கொடுமை நிலவுவது வேதனையளிப்பதாக, மனம் நொந்து கூறியுள்ளனர்.இந்நிலையில் தான், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர், தங்கள் சுயநலத்திற்காக, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கூச்சல் போடுகின்றனர்.இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் ஜாதியின் பெயரால் மக்களைப் பாகுபடுத்தி, அரசியல்வாதிகள் 'குளிர் காய்வரோ' தெரியவில்லை.


latest tamil news


ஜாதி வாரி அடிப்படையில் தான், தற்போது இடஒதுக்கீடு உள்ளிட்ட சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.ஆனால் அதை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில், நம் நாடு உள்ளது என்ற உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தன் ஆட்சிக் காலத்திலேயே, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்; அதை சட்டமாக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

ஆனால், தமிழகத்தின் துரதிர்ஷ்டம், அது கை கூடாமல் போய் விட்டது!ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது, நாட்டில் கலவரத்தை தான் துாண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில, 'குள்ளநரி' அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக, நாட்டின் அமைதிக்கு, 'வேட்டு' வைக்க கூடாது.எனவே, ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கக் கூடாது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.'நீட்' தேர்வு போல, இவ்விஷயத்திலும் பிரதமர் மோடி உறுதியாக நின்று சாதித்து காட்ட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
05-டிச-202122:48:19 IST Report Abuse
Mohan "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அது அப்போது. அதன் பிறகு ரெண்டு தேவன் வந்தேறிக்கிட்டாருங்கோ.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
05-டிச-202121:30:13 IST Report Abuse
GMM இந்து சாதி (குழுக்கள்) அடிப்படையில் இட ஒதுக்கீடு. சாதி பிரிவு அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யவில்லை? சாதி பிரிவுகள் ஏராளம். பிறப்பு, பள்ளி சான்றில் சாதி பெயர் பதிவு இல்லை. கலப்பு திருமணம், மத மாற்ற அனுமதி மற்றும் சாதி குழுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மூலம் சாதி தலைவர்கள் தான் பயன் பெற்று வருகின்றனர். மக்கள் குழுக்கள் அமைத்து தொழில், திருமணம் புரிய சாதி முறையில் வாழ்ந்தனர். ஏற்ற தாழ்வு ஒரே குடும்பம், சாதி, சமூகத்தில் எப்போதும் இருக்கும். பல அந்நியர்கள் ஆட்சி புரிய பாதுகாப்பு தந்தவர்கள் சில குறிப்பிட்ட சமூக மக்கள். அவர்களுக்கு உதவிய சில சமூகமும் உண்டு. ஆனால், அந்நியர்கள் ஆட்சி காலத்தில் உணவு பொருட்கள், துணி விலை மதிபற்றவை? அப்போது' permit under ration rules, textile control officer, notice of demand for property tax ... மூலம் கட்டுப்படுத்த பட்டு, வளங்களை அந்நியர்கள் அள்ளி சென்றனர்.? ஆனால், அரசர்கள் நம் நாட்டில் சொத்துக்களை விட்டு சென்றனர். (சீனாவில் இயற்கை வளங்கள் குறைவு?கம்யூனிஸ்ட் தலைவர் குணம் அறிந்த சீன செல்வந்தர்கள் பல நாடுகளில் முதலீடு செய்து வருகின்றனர். காங்கிரஸ், திராவிட இயக்க தலைவர்கள் பணம் பாதுகாக்க பல வெளிநாடுகளில் பண முதலீடு செய்து வருகின்றனர்.) சாதி, பொருளாதாரம் நிலையற்றது? மீண்டும் கண்ணதாசன், சுசீலா.. போன்றோர் குடும்ப வழியில் உருவாகவில்லை. ஒரு திறமையான நபர்/மாணவர் பல வேலை வாய்ப்பு உருவாக்க முடியும். இட ஒதுக்கீடு நீக்கி போட்டி தேர்வு நம்மை வளப்படுத்தும். சாதி தந்திரத்தில் இருந்து நாம் மீள வேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
05-டிச-202120:18:35 IST Report Abuse
Tamilan நாட்டின் மூளை முடுக்கெல்லாம் இதே கதைதான் . கேட்டு கேட்டு புளித்துப்போன ஒன்று . இதை ஏன் பெரிது படுத்துகின்றன?. ஜாதியை ஒழிக்க முற்பட்டதால்தான் இன்று நாடு அல்லோகள் பட்டுக் கொண்டிருக்கிறது அந்நியர்களின் வாலைப்பிடித்துக்கொண்டு கூஜா தூக்கிக்கொண்டு இருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X