புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை வகுப்பதற்கும், சுற்றுலா கொள்கையை வடிவமைப்பதற்காக சுற்றுலா தொழில் முனைவோர் சந்திப்பு கருத்தரங்கம், நுாறடி சாலை சன்வே மேனர் ஓட்டலில் நேற்று நடந்தது.கருத்தரங்கை, கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், சம்பத் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், சுற்றுலாத் துறை செயலர் விக்ராந்த் ராஜா, இயக்குனர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சுற்றுலா தொழில்முனை வோர், பயண அமைப்பாளர்கள், பல்வேறு அரசு துறையினர் கலந்து கொண்டு, புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.நிறைவு விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
திட்டங்களை நிறைவேற்ற முழு அதிகாரம் நமக்கு தேவைப்படுகிறது. புதுச்சேரியில் விவசாயம் குறைந்து உள்ளதால், சுற்றுலா மூலம் தான் வருமானத்தை பெருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு வர, மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாக உள்ளது. ஆகையால், கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.சுற்றுலா பயணிகளுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள் அமைக்க, ஆட்சியில் இருந்த காலத்தில் தங்கும் விடுதிகள் கட்டினால் அரசு சார்பில் ரூ.1 கோடி வரை மானியம் வழங்கினோம். இதனை ஓட்டல் உரிமையாளர்கள் செய்ய முன் வர வேண்டும்.
ஆனால், இதற்கு அரசு அதிகாரிகள் உடனடியாக அனுமதி வழங்குவது இல்லை என்பது வேதனை அளிக்கிறது.தொழில் துவங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கும் திட்டம் உள்ளது. ஆனால், அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுவதால் பலர் புதுச்சேரியில் தொழில் துவங்க வருவது இல்லை. அதனால், ஒற்றை சாளர முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மழையால் சேதமடைந்த அனைத்து சாலை களையும் சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மழை காலம் முடிந்த பிறகு சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும்.புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் ரூ.1,000 கோடியில் கொண்டு வரப்பட்டது. இதில், இதுவரை ரூ.60 கோடி அளவுக்கு மட்டுமே பணிகள் நடந்தது. தற்போது என்.ஆர்.காங்., தலைமையிலான அரசு வந்தபிறகு, ரூ. 200 கோடி அளவுக்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் அரசுக்கு சொந்தமான 750 ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு சுற்றுலாவை மேம்படுத்த வழங்கினால், ரூ. 2 ஆயிரம் கோடி செலவு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. ஆகையால், அந்த நிலத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.புதுச்சேரி ஓட்டல் அசோசியேஷன் தலைவர் ராமச்சந்திரன், சுற்றுலா தொழில் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் அடங்கிய குறிப்புகளை முதல்வரிடம் அளித்தார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement