பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ரூ.20 ஆயிரம் கோடி கேட்க தமிழக மின்வாரியம் முடிவு

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை,-மத்திய அரசின், 'ரிவேம்ப்டு டிஸ்ட்ரிபியுஷன் செக்டார் ஸ்கீம்' என்ற புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளை, தமிழகத்தில் செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்க, தமிழக மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சாரம் விற்பனையை துல்லியமாக

சென்னை,-மத்திய அரசின், 'ரிவேம்ப்டு டிஸ்ட்ரிபியுஷன் செக்டார் ஸ்கீம்' என்ற புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளை, தமிழகத்தில் செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்க, தமிழக மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.



latest tamil news


மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சாரம் விற்பனையை துல்லியமாக கண்டறியவும், புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.இரு பிரிவுகளை உள்ளடக்கிய, 3.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை, 2025 - 26ல் முடிக்க 'கெடு' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவின் கீழ், புதிய துணைமின் நிலையம், மின் வழித்தடம் அமைத்தல், மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்துதல், மின் இணைப்பு களில், 'ஸ்மார்ட், ப்ரீபெய்டு' மீட்டர் பொருத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.60 சதவீத மானியம்இரண்டாவது பிரிவில் ஊழியர்களுக்கு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செயல்படுத்தப்படும்.


latest tamil news


இதுதொடர்பாக, தமிழக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதுப்பிக்கப்பட்ட மின் திட்ட பணிக்கான நிதியை, மத்திய அரசு வழங்கும். இதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை, இம்மாதத்திற்குள் தமிழக மின் வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் திட்ட பணிகளை முடித்துவிட்டால், திட்டத்திற்கு ஒப்புதல்அளிக்கும் நிதியில், 60சதவீதம் மானியமாக கிடைக்கும். எனவே, தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் வகையில், விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அறிக்கை விரைவில், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202114:04:41 IST Report Abuse
ஆரூர் ரங் ஒருகாலத்தில் மின் விநியோகம் தனியாரிடம் இருந்த போது மின்தடை🙏 இல்லை. மின் திருட்டு இல்லை. புகார்கள் உடனடியாக சரி செய்யப் பட்டன. இப்போது கூட மும்பையில் தனியார் மின் வினியோகம்தான் அதிகம். மின்வாரிய வியாபாரம்😛 நடத்துவது அரசுக்கு வேண்டாத வேலை.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
05-டிச-202112:26:41 IST Report Abuse
RandharGuy உங்கப்பன் வீட் டு காசையா கேக்குரோம் .....
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
05-டிச-202112:23:30 IST Report Abuse
RandharGuy மின்சார வாரியம் உருப்படவேண்டும் என்றால் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் அளவில்லாத இலவச மின்சாரம் கட்டுப்படுத்தப் படவேண்டும்..- ஆனா தேர்தல் நிதி கொடுக்குற முதலாளிகளுக்கு கடன் ரத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X