பொது செய்தி

இந்தியா

பிரபல பத்திரிக்கையாளர் வினோத் துவா காலமானார்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி-டில்லியில் உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பத்திரிகையாளர் வினோத் துவா, 67, நேற்று காலமானார்.துார்தர்ஷன், என்.டி.டி.வி., உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய வினோத் துவா, 1996ல் இந்திய மின்னணு துறையின் முதல் பத்திரிகையாளர் என்ற சிறப்புடன், சிறந்த பத்திரிகையாளருக்கான விருது பெற்றவர். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 2008ல் பத்மஸ்ரீ விருது

புதுடில்லி-டில்லியில் உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பத்திரிகையாளர் வினோத் துவா, 67, நேற்று காலமானார்.



latest tamil news


துார்தர்ஷன், என்.டி.டி.வி., உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய வினோத் துவா, 1996ல் இந்திய மின்னணு துறையின் முதல் பத்திரிகையாளர் என்ற சிறப்புடன், சிறந்த பத்திரிகையாளருக்கான விருது பெற்றவர். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 2008ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இந்தாண்டு கொரோனாவால் வினோத் துவாவும், அவரது மனைவி பத்மாவதியும் பாதிக்கப்பட்டனர். ஜூனில் பத்மாவதி இறந்தார். வினோத் துவா உடல் நலம் தேறினாலும் கொரோனாவின் பின் விளைவுகளால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


latest tamil news


இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார். வினோத் துவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-டிச-202116:22:29 IST Report Abuse
sankaseshan தூவாவும் ப்ராணாயைப்போல ட்யன்ஸ்ட்டி இத்தாலிய குடும்பத்தின் அடிமையாக இருந்தவர்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
05-டிச-202111:32:45 IST Report Abuse
Sridhar என்னதான் மோசமான கேவலமான பத்திரிக்கையாளராக இருந்தாலும், என்னதான் பிறர் சாவை மகிழ்ந்து கொண்டாடிய ஈன பிறவியாக இருந்தாலும், அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
05-டிச-202110:54:44 IST Report Abuse
ஆரூர் ரங் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசு ஆட்சியில் இதுபோன்ற முன்களப்ஸுகளுக்கு டெல்லியின் ஆடம்பரப் பகுதியான லட்டியன்ஸ் சில் பெரிய பெரிய சொகுசு பங்களாக்களை வாரி வழங்கியது. அதனால் NDTV இன்றும் காங்கிரசின் ஊதுகுழல்தான்.
Rate this:
05-டிச-202111:55:08 IST Report Abuse
subramanianசிறந்த பத்திரிக்கையாளர். தேர்தல் முடிவுகளை இவரும் பிரனாய் ராயும் ஆராய்வதை பாரத்திருக்கின்றேன். ஆனால் ஏனோ கண்முடித்தனமாக காங்கிரஸின் ஊதுகுழலாகிவிட்டார்.ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X