பொது செய்தி

தமிழ்நாடு

13வது மெகா தடுப்பூசி முகாமில் 20.98 லட்சம் பேர் பயன்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் நேற்று (டிச.,04) நடந்த, 13வது மெகா தடுப்பூசி முகாமில், 20.98 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை, 80.44 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு மருத்துவமனைகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும்

சென்னை-தமிழகத்தில் நேற்று (டிச.,04) நடந்த, 13வது மெகா தடுப்பூசி முகாமில், 20.98 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை, 80.44 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



latest tamil news


இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு மருத்துவமனைகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுதவிர, வாரந் தோறும் மெகா தடுப்பூசி முகாமையும் அரசு நடத்தி வருகிறது.இதுவரை, 12 மெகா தடுப்பூசி முகாம்கள் வாயிலாக மட்டும், 2.22 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 13வது மெகா தடுப்பூசி முகாம், மாநிலம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடந்தது.இதில், ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 147 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி; 13 லட்சத்து 48 ஆயிரத்து 565 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, 20 லட்சத்து 98 ஆயிரத்து 712 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழகத்தில் இந்த ஆண்டு ஜன., 16 முதல் இதுவரை, 80.44 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி; 47.46 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னையில் அதிகம்அரசின் 13வது மெகா தடுப்பூசி முகாமில், அதிகபட்சமாக சென்னையில், 1 லட்சத்து 89 ஆயிரத்து 197 பேர்; விழுப்புரத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 100 பேர்; சேலத்தில் 1 லட்சத்து 1,331 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X