பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் 152 அடி தேக்க வலியுறுத்தி கூடலூரில் 152 பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கூடலுார்: பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வலியுறுத்தி கூடலுாரில் விவசாய சங்கத்தினர் 152 பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கூடலுாரில் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம், விவசாய சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை விரைவில் பலப்படுத்தி அணையில் 152 அடி

கூடலுார்: பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வலியுறுத்தி கூடலுாரில் விவசாய சங்கத்தினர் 152 பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கூடலுாரில் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம், விவசாய சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.



latest tamil news



பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை விரைவில் பலப்படுத்தி அணையில் 152 அடி நீர் தேக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தேனி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கூடலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே 152 பொங்கல் வைத்தனர்.


latest tamil news



வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு, முல்லைச் சாரல் விவசாய சங்கத் தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், துணைத் தலைவர் ஜெகன், 18ம் கால்வாய் விவசாய சங்கத் தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202120:22:59 IST Report Abuse
அப்புசாமி தெருவை அடைச்சு பொங்கல் வெச்சீங்களே.. அப்புறம் இடத்தை சுத்தம் செஞ்சீங்களா? கேஸ் அடுப்பை வெச்சு பொங்கியிருந்தால் பொல்யூஷன் குறைஞ்சிருக்குமே? உங்களச்சொல்லி குத்தமில்லை. உங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் குடுத்தவங்களை சொல்லணும்
Rate this:
Cancel
05-டிச-202116:50:20 IST Report Abuse
kulandai kannan முல்லை பெரியாறு அணையைக் திறக்கவே மாட்டோம். கர்நாடக அணைகளை மூடவே கூடாது என்று வலியுறுத்துவோம். இப்படிக்கு... முன் தோன்றி மூத்த குடி.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
05-டிச-202111:26:14 IST Report Abuse
veeramani பெரியார் தண்ணீரினால் வாழ்ந்துகொண்டு இருக்கும் தேனீ மதுரை சிவகங்கை ராம்நாடு மக்களில் ஒருவனின் கரூ த்தது. கேரள சகோதரர்கள் தண்ணீரை நம்பி நாங்கள் உள்ளோம், தண்ணீரை பெற்று உணவு வகைகள், பால், பழங்கள், காய்கறிகள் கொடுக்கிறோம். எங்களுக்குள்ள பந்தம் உறவுமுறையானது. தற்சமயம் நுறு நாற்பத்திரெண்டு ஆதி தண்ணீர் சேமிக்க இயலுகிறது. இதற்கு மேலும் சேமிக்கும் வலிமை அணைக்கு உண்டு. ஆயினும் அணையின் வயதை வைத்து யோசிக்கும் பொழுது, இதுவே போதும். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X