கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொருளாதார வளர்ச்சிக்காக கடவுள் சொத்தை விலை கொடுக்க முடியாது: ஐகோர்ட்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: '‛பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்றாலும், அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது,'' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னையை சேர்ந்த, 'மெர்மெய்ட் பிராப்பர்ட்டீஸ்' நிறுவனத்தின் இயக்குனர் தாக்கல் செய்த மனு: திருப்போரூர் தாலுகா திருவிடந்தையில், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகில், நித்ய கல்யாண பெருமாள்
பொருளாதார வளர்ச்சி, கடவுள், சொத்து, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,  சென்னை ஐகோர்ட்

சென்னை: '‛பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்றாலும், அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது,'' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த, 'மெர்மெய்ட் பிராப்பர்ட்டீஸ்' நிறுவனத்தின் இயக்குனர் தாக்கல் செய்த மனு: திருப்போரூர் தாலுகா திருவிடந்தையில், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகில், நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 0.31 சென்ட் நிலமும் உள்ளது. எங்கள் நிலத்துக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே கோவில் நிலம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை நேரடியாக அணுக, இந்த நிலம் தேவைப்படுகிறது. 22 சென்ட் நிலத்தை குத்தகைக்கு தரக்கோரி விண்ணப்பித்தோம். இதையடுத்து, மாதம் 7,000 ரூபாய் வாடகையில், 400 சதுர அடி இடத்தை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகையாக வழங்க, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து 22 சென்ட் இடத்தை குத்தகையாக வழங்க, அறநிலையத் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: கோவில் நிலத்தில் ஒரு அங்குலம் இடத்தை கூட குத்தகைக்கு தர தேவையில்லை; மனுதாரரின் நிலத்தில் பெரிய அளவில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், அணுகு சாலை நிரந்தரமாகி விடும் என, நித்ய கல்யாண பெருமாள் கோவில் தரப்பில் கூறப்பட்டது.பல ஆண்டுகளாக காலியிடமாக இருந்தாலும், அதை எதிர்காலத்தில் பயன் படுத்த முடியாது என்று கூற முடியாது. அணுகு சாலைக்காக மட்டுமே இந்த நிலம் தேவைப்பட்டால், அறநிலையத்துறை வாயிலாக அரசை அணுகி கொள்ளலாம்.

நிலத்தின் உரிமையாளரான கோவில் தரப்பை அரசு கேட்க வேண்டும்; ஆட்சேபனை வந்தால், அதை கருத்தில் கொள்ள வேண்டும். கோவில் சொத்துக்களை பாதுகாக்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கோவில் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததால், கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக, இரு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு, 2021 ஜூன், 7ல் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. பொது நோக்கத்துக்கு கூட, கோவில் சொத்துக்களை எடுக்க முடியாது என்று சிறப்பு அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.


latest tamil newsபொது நலன், தனிநபர் நலன், பொருளாதார, தொழில் வளர்ச்சி என எந்த காரணத்துக்காகவும், கோவில் நிலத்தை எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவை அமல்படுத்த தேவையில்லை. அறநிலைய துறை வாயிலாக, அரசுக்கு மனுதாரர் விண்ணப்பிக்கலாம். கோவில் தரப்பு கருத்தை கேட்டு, அரசு முடிவெடுக்க வேண்டும். தனி நபர், நிறுவனம், தொழில் வளர்ச்சிக்காக கோவில் சொத்துக்களை எடுக்கும் முடிவில், அரசு நிதானமாக செயல்பட வேண்டும். மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் என்பது முக்கியமானதாக இருந்தாலும், அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது. எனவே, மனுதாரர் அரசை அணுகி கொள்ளலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-டிச-202123:28:04 IST Report Abuse
J. G. Muthuraj உங்கள் கடவுள்பக்தி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது... முறைப்படி ஏற்பாடுகள் செய்து அதன் மூலம் கோவிலுக்கு நேர்மையான வருமானம் வந்தால்....அதை பராமரிப்புக்கும், ஏழை பக்தர்கள் மேம்பாட்டிற்காகவும் செலவு செய்யலாமே.....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
05-டிச-202123:13:25 IST Report Abuse
Mohan நீங்க சொல்லுறத பார்த்தா கோயில் நகை எல்லாம் உருக்கியாச்சு போல.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-டிச-202122:38:46 IST Report Abuse
DARMHAR அண்மையில் கடலூர் மாவட்டம் வானமாதேவி என்ற ஊரில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு கோவிலையே இடித்துவிட்டார்களே. வேறென்ன சொல்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X