நாகாலாந்தில் கிராமத்தினர் மீது தவறுதலாக துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொஹிமா: நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.நாகாலாந்து மாநிலம் மியான்மர் எல்லை அருகே உள்ள மான் மாவட்டத்தில் ஒட்டிங் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக
நாகாலாந்து, துப்பாக்கிச்சூடு, பலி

கொஹிமா: நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.

நாகாலாந்து மாநிலம் மியான்மர் எல்லை அருகே உள்ள மான் மாவட்டத்தில் ஒட்டிங் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள், பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும், சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எனவும், ஒவ்வொரு வாரமும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தங்களது கிராமத்திற்கு செல்ல காத்திருந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


latest tamil news



தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து அங்கு, கோபத்துடன் வந்த கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர் நெப்பியூ ரியோ கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202121:45:49 IST Report Abuse
அப்புசாமி One mans terrorist is another mans freedom fighter. நாகாலாந்து மக்கள் தீவிர வாதிகளுக்கு குடுத்தாங்களா? அப்பிடிக் குடுத்தா ஏன் குடுக்கிறாங்க? அடைக்கலம் குடுக்கிறவங்களோட அடிப்படை பிரச்சனை என்ன? அதை எப்படி தீர்க்கணும்? நாகா பழங்குடியினருக்கு நவீன வாழ்க்கை முறை ஒத்து வருமா? இதெல்லாம் தெரிஞ்சுக்காம அங்கே வறுமையை ஒழிக்கறோம். தொழிற்சாலை தொறக்கறோம். எட்டுவழிச்சாலை போடறோம்னு கெளம்பிட்டா அவிங்க டென்ஷனாயிடறாங்க. முதலில் நாகாலாந்து மக்களுக்கு நல்ல பதவி குடுத்து டில்லி முதல் தமிழகம் வரை நியமிக்க முடியுமா பாருங்கள். அங்கே போய் இருக்குறவங்களையும் சுட்டுத் தள்ளினா, இன்னும் பிரச்சனை உக்கிரமாகும். அவிங்களை அவிங்க வழியில் வாழவிடுங்க. இந்தியை இங்கே திணிப்பது மாதிரி, அங்கே நவீன வாழ்க்கையை திணிக்காதீர்கள். அவிங்கவங்களுக்கு அவிங்க வாழ்க்கை வாழ உரிமை உண்டு. தெரிஞ்சுக்கோங்க.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
05-டிச-202118:53:16 IST Report Abuse
Perumal Rangu,if you are one among those,will you comment like this.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202118:49:25 IST Report Abuse
Kasimani Baskaran தீவிரவாதிகளை தப்பிக்க உதவியிருப்பார்கள் - இல்லை என்றால் குடிமக்கள் ராணுவத்தினரிடம் மல்லுக்கட்ட வேண்டியதே இல்லையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X