பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: ‛‛திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.,5 ம் தேதி):
Meteorological, Department, Announces, Heavy Rains, 4 Districts,  Tamil Nadu, தமிழகம், 4 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news


தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.,5 ம் தேதி): திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்ள மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement

நாளை 6ம் தேதி: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 7 ம் தேதி: தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவாவ மழை அளவு:


latest tamil news



கொடுமுடி (ஈரோடு), ஆனைபாளயம் (கரூர்) தலா 9 செ.மீ., கோவை 7 செ.மீ., எட்டயபுரம் (துாத்துக்குடி) 6 செ.மீ., நாங்குநேரி (திருநெல்வேலி), மோகனுார் (நாமக்கல்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 5 செ.மீ., பஞ்சப்பட்டி (கரூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), வீரபாண்டி (தேனி), சிவகாசி (விருதுநகர்), உடுமலைபேட்டை (திருப்பூர்) தலா 4 செ.மீ., ஆண்டிப்பட்டி (தேனி), கரூர், போடி (தேனி), ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் (விருதுநகர்), தல்லாகுளம் (மதுரை), மாயனுார் (கரூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), ஈரோடு தலா 3 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



latest tamil news




வங்ககடல் பகுதிகள்:


மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலை கொள்ளும்.

இதன் காரணமாக இன்று 5ம் தேதி: வடமேற்று வங்கக்கடல் மற்றும் அதைஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-டிச-202121:54:53 IST Report Abuse
NicoleThomson கொங்கு நாட்டிற்கு மழை போதுமாம், தமிழ் நாட்டில் மழையை பெய்ய சொல்லுங்க எசமான்
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
05-டிச-202121:43:03 IST Report Abuse
C.SRIRAM ஆய்வையும் இலவச உணவையும் யார் கேட்டார்கள்? தேவை தண்ணீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202118:01:17 IST Report Abuse
J.V. Iyer போட்டோஷூட்டிற்கு முதல்வர் ரெடி - இப்படிக்கு சன் டிவி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X