பொது செய்தி

இந்தியா

நியூசி.,க்கு இமாலய இலக்கு; 539 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 'டிக்ளேர்'

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 539 ரன்கள் முன்னிலையுடன் ‛டிக்ளேர்' செய்தது. 540 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‛டிரா' ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
INDvNZ, Test, India, New Zealand, Declare, இந்தியா, நியூசிலாந்து, டெஸ்ட், டிக்ளேர்,

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 539 ரன்கள் முன்னிலையுடன் ‛டிக்ளேர்' செய்தது. 540 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‛டிரா' ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய துவக்க வீரர் 150 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.


latest tamil news


அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பவுலர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. நியூசி., அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்தியா தரப்பில் அஷ்வின் 4, சிராஜ் 3, அக்சர் படேல் 2 விக்கெட் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் 263 ரன் முன்னிலை பெற்ற போதும், ‛பாலோ ஆன்' கொடுக்காமல் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. இன்று (டிச.,05) மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியது.


latest tamil news


இந்திய துவக்க வீரர்கள், மயங்க் அகர்வால் (62), புஜாரா (47) ரன்னில் அஜாஸ் படேல் சுழலில் வீழ்ந்தனர். அடுத்ததாக சுப்மன் கில் (47), கேப்டன் கோஹ்லி (36) தன் பங்கிற்கு ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும், சஹா 13 ரன்னிலும், ஜெயந்த் யாதவ் 6 ரன்னிலும் வெளியேறினர். இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தபோது, டிக்ளர் செய்தது. அதிரடி காட்டிய அக்சர் படேல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.

540 ரன்கள் என்ற இமாலய இழக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு, துவக்கத்திலேயே அஷ்வின் ‛செக்' வைத்தார். துவக்க வீரர் லதாம் 6 ரன்னில் அஷ்வின் சுழலில் வெளியேறினார். நியூசிலாந்து அணி, தேநீர் இடைவெளி வரை 4 ஓவர் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. நியூசி., வெற்றிக்கு இன்னும் 527 ரன்கள் தேவை என்பதால், இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
05-டிச-202115:00:46 IST Report Abuse
SUBBU இந்திய அணி உறுதியாக வெற்றி பெரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X