அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக - அமமுக தொண்டர்கள் தள்ளு,முள்ளு

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி
ஜெயலலிதா, அதிமுக, அமமுக, தொண்டர்கள், மோதல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


latest tamil news


ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


latest tamil news


Advertisement


பழனிசாமி, பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த போதும், அங்கிருந்து திரும்பும் போதும், அ.ம.மு.க., தொண்டர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அ.ம.மு.க., வினர் பழனிசாமிக்கு எதிராக கோஷம் போட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


உறுதிமொழி ஏற்பு



latest tamil news



ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்று கொண்டனர். அப்போது, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும். நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என பொய் வாக்குறுதி அளித்த முதல்வர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.


latest tamil news





சசிகலா, தினகரன் அஞ்சலி



latest tamil news



ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனும், சசிகலாவும் தனித்தனியாக வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202123:05:28 IST Report Abuse
பேசும் தமிழன் மன்னார்குடி மாபியா கும்பலுக்கு இது வேண்டாத வேலை.... அதிமுக 1 1/2 கோடி தொண்டர்கள் கொண்ட அமைப்பு.... மன்னார்குடி மாபியா கும்பல் வாலை சுருட்டி கொண்டு இருந்தால் நல்லது... உங்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
05-டிச-202121:55:05 IST Report Abuse
Anantharaman Srinivasan இந்த ஆண்டு அஞ்சலி கடமை முடிந்தது. வருமாண்டில் சந்திப்போம்.. வாழ்க அண்ணா நாமம். சாரி அம்மா நாமம்.. நமக்கு நெத்தியில்...
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
05-டிச-202121:41:20 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இரும்பு பெண்மணி மறைந்த முன்னாள் அதிமுக முதல்வர் ஜெயலலிதா. அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X