பொது செய்தி

இந்தியா

கோவிட்டிற்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம்: மத்திய சுகாதார அமைச்சர் நம்பிக்கை

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியாவில் கோவிட்டிற்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம்,'' என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று துவங்கப்பட்டது. ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2 முதல், மாநில மற்றும் மத்திய போலீஸ் துறை பணியாளர்கள்,
win, war, Against, Corona, Federal Health Minister, Hope, கொரோனா, கோவிட்,போர், ஒன்றாக வெற்றி பெறுவோம், மத்திய சுகாதார அமைச்சர், நம்பிக்கை,

புதுடில்லி: ‛‛இந்தியாவில் கோவிட்டிற்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம்,'' என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார்.


latest tamil news


இந்தியாவில் 50% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி | India | 50% vaccinated | Dinamalar

இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று துவங்கப்பட்டது. ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2 முதல், மாநில மற்றும் மத்திய போலீஸ் துறை பணியாளர்கள், ஆயுதப்படை பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், குடிமைத் தற்காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், நகராட்சி ஊழியர்கள், சிறை ஊழியர்கள், கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.ஐ., பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தேர்தல் பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தடுப்பூசி இயக்கம் மார்ச் 1 முதல் விரிவுப்படுத்தப்பட்டு, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கோவிட் தடுப்பூசிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது.


latest tamil news


இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது: இந்தியாவில் போடப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி 127.61 கோடியைத் தாண்டியுள்ளது. நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா. தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது பெருமைக்கு உரியதாகும். கோவிட்டிற்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
05-டிச-202118:49:41 IST Report Abuse
J.Isaac சிரம் பூஸ்டர் புரோமோட் பண்ண ஒமிக்ரோன்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-டிச-202117:19:46 IST Report Abuse
அறவோன் "ஓ'மித்ரோன்"தான் கொடியது, அதற்கு எதிரான போரில் நாம் அனைவரும் வெல்வோம் 👍👍👍👍👍
Rate this:
Cancel
05-டிச-202115:53:51 IST Report Abuse
அப்புசாமி பேச்சக் குறையுங்க... கொரோனாவின் சோலியை முடியுங்க. ரொம்ப பேசுனா முன்னாள் மந்திரி ஹர்ஷ வர்தன் மாதிரி ஆயிடப் போறீங்க.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-டிச-202120:28:18 IST Report Abuse
Visu Iyerஎப்போதும் அவர்கள் பேசுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X