பிரிட்டனில் அதிவேகமாக பரவும் ஒமைக்ரான்: 160 பேர் பாதிப்பு

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021
Share
Advertisement
லண்டன்: பிரிட்டனில் ஒமைக்ரான் உருமாறிய கோவிட் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 160 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ஒமைக்ரான் பரவல் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ம் தேதி புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
Fastest, Spreading, Omigaran, UK, 160 People, Affected,

லண்டன்: பிரிட்டனில் ஒமைக்ரான் உருமாறிய கோவிட் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 160 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ஒமைக்ரான் பரவல் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்


latest tamil news



தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ம் தேதி புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது.

பிரிட்டனும், தென்னாப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது. இதற்கு மத்தியிலும், அங்கு இதுவரை 160 பேருக்கு ஒமைக்ரான் உருமாறிய கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக பிரிட்டன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: ஒமைக்ரான் உருமாறிய கோவிட் பரவலைக் குறைக்கவே தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நமது ஆய்வாளர்கள் ஒமைக்ரான் எப்படிப் பரவுகிறது? தடுப்பூசிகளுக்கு எதிராக எந்தளவு வேலை செய்கிறது? என்பது குறித்துக் கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒமைக்ரானை கட்டுப்படுத்த தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, பிரிட்டன் வரும் சர்வதேச பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் எடுத்த கோவிட் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X