நாகாலாந்தில் கிராமத்தினர் கொல்லப்பட்ட சம்பவம்: வேதனை தெரிவித்தது ராணுவம்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கொஹிமா: மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் சென்ற ராணுவத்தினர், பொதுமக்களில் 13 பேரை தவறுதலாக சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்திற்கு மாநில முதல்வர், ராணுவம், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில்
Villagers, killed, Nagaland, Army, expresses, grief, நாகாலாந்து, கிராமத்தினர், கொல்லப்பட்ட சம்பவம், வேதனை, தெரிவித்தது, ராணுவம்,

கொஹிமா: மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் சென்ற ராணுவத்தினர், பொதுமக்களில் 13 பேரை தவறுதலாக சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்திற்கு மாநில முதல்வர், ராணுவம், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.,5) அதிகாலை மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தின் ஒடிங் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ராணுவத்தினர் கிராமத்தினரை பயங்கரவாதிகள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news




ஒரு பாதுகாப்பு வீரர் உயிரிழப்பு


தகவலறிந்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு பாதுகாப்பு படையினரை தாக்கியுள்ளனர். அவர்களின் மூன்று வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். கிராமத்தினரின் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். ஒரு வீரர் உயிரிழந்தார். தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் மேலும் 7 கிராமத்தினர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் நாகலாந்து மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

நாகாலாந்து முதல்வர் ரியோ இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான துரதிர்ஷ்டவசமான சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து சட்டத்தின்படி நீதி வழங்கும். அனைவரும் அமைதியாக இருக்கும் படி வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். ராணுவமும் நடந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகாலாந்தின் ஓட்டிங்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் மனதை பதற வைக்கிறது. மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். சாமானிய மக்கள் அல்லது பாதுகாப்பு படையினர் சொந்த நிலத்தில் பாதுகாப்பாக இல்லாத போது, மத்திய உள்துறை அமைச்சகம் சரியாக என்ன செய்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202108:23:30 IST Report Abuse
பேசும் தமிழன் இப்போ இத்தாலி இளவரசர் வருவார் பாருங்கள்.... மோடி ஒழிக என்று கூப்பாடு போட... கூடவே கூலிபான்ஸ் மற்றும் சீனா ஆதரவு உண்டியல் குலுக்கி கும்பலும் வருவானுங்க
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-டிச-202106:16:18 IST Report Abuse
Mani . V சேம் சைடு கோல் போட்டு விட்டு மன்னிப்பு வேறு. எதிரியை கொல்லச் சொன்னா அப்பாவிகளை கொன்று விட்டு....
Rate this:
Cancel
05-டிச-202122:15:11 IST Report Abuse
மாரியப்பன் நமது இராணுவத்திற்கு தவறான தகவல்களை அளித்தவனின் பின்புலத்தை ஆராய்ந்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X