பொது செய்தி

இந்தியா

வெற்றியின் விளிம்பில் இந்தியா: மும்பை டெஸ்டில் அசத்தல்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின் 'சுழல்' ஜாலம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா
indvsnz,india, newzealand, cricket,

மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின் 'சுழல்' ஜாலம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன் முன்னிலை பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது.


latest tamil news



மூன்றாவது நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால்(62), புஜாரா(47), சுப்மன்(47), கேப்டன் கோஹ்லி(36) கைகொடுக்க, இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன் என்ற நிலையில் 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்தின் அஜாஸ் படேல், இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.


latest tamil news



முதல் இன்னிங்ஸ் முன்னிலை (263 ரன்) சேர்த்து நியூசிலாந்துக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதனை விரட்டிய நியூசிலாந்து அணி, அஷ்வின் 'சுழலில்' ஆட்டம் கண்டது. இவரது வலையில் லதாம்(6), யங்(20), ராஸ் டெய்லர்(6) அவுட்டாகினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மிட்சல்(60), அக்சர் பந்தில் வீழ்ந்தார். நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து, 400 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news


நாளை(டிச.,06) எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி, சுலப வெற்றி பெற இந்தியா காத்திருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
05-டிச-202118:45:11 IST Report Abuse
K.SANTHANAM இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வம்சாவளி அஜாஜ் படேல் அவர்களுக்கும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X