பொது செய்தி

இந்தியா

மகா.,வில் 8; ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று: இந்தியாவில் பாதிப்பு 21 ஆனது

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்புக்கு 21 பேர் உள்ளாகி உள்ளனர். இது குறித்து

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்புக்கு 21 பேர் உள்ளாகி உள்ளனர்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்படும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்று காரணமாக இது வரையில் சுமார் 160 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடரந்து வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருவபர்கள் கண்காணிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஒமைக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வோடு கண்காணிக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. இந்தியவை பொறுத்தவரையில் கர்நாடகம், குஜராத் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் சுமார் 8 பேருக்கு ஒமைக்ரான்தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.இதனையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202100:22:49 IST Report Abuse
உளறுவாயன் துர்வாச்சு... எனும் பெயர் கொண்ட எலி.. அம்மனமாக ஓடுது....
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
05-டிச-202121:00:55 IST Report Abuse
ராம.ராசு வைரஸ் தொற்று என்பதைவிட அதுபற்றிய செய்திகள்தான் மக்களைப் பயமுறுத்தி பாடாய்ப் படுத்திக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு வைரஸும் இயல்பில் உருவத்தில் மாற்றமாகிக் கொண்டே இருக்கும் என்பதாவே சொல்லப்படுகிறது. அதைப் புதிது என்று ஆங்கில மருத்துவ உலகம், ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெரிதுபடித்துக்கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வைரஸ் பற்றி ஆரம்பத்தில் கொரோனாவை விட அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது. அதைவிட அதிகமான பாதிப்புக்களை உருவாக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதிப்பு குறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. எதையும் தீர்க்கமாகச் சொல்லப்படவில்லை. வைரஸ் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்று உறுதியாகச் சொல்லுபவர்களும் உண்டு. இப்படியாக வைரஸ் பரவுதால், இயல்பாகவே உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கும் வாய்ப்பு அதிகமாகும் என்று நம்பிக்கை தருபவர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஒரு சுனாமியை. ஒரு சூறாவளியை, முன் கூட்டியே அறிந்தாலும், மனிதனால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. விளைவுகளை சந்தித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உடலே தன்னைக் காத்துக்கொள்ளும் திறன் பெற்று இருந்தாலும், செயற்கையான மருந்துகளால் அதன் திறனைக் குறைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
Rate this:
Cancel
05-டிச-202120:57:26 IST Report Abuse
முருகன் முன்றாவது அலை ஆட்டம் ஆரம்பம். மத்திய அரசுக்கு மக்களை பற்றி கவலையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X