குதிரை பேரத்தில் ஈடுபடும் பஞ்சாப் பாஜ.,; ஆம் ஆத்மி தலைவர் புகார்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சண்டிகர்: அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தலைவர்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் பஞ்சாப் பாஜ., ஈடுபட்டு வருவதாக அம்மாநில ஆம் ஆத்மி தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய

சண்டிகர்: அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தலைவர்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் பஞ்சாப் பாஜ., ஈடுபட்டு வருவதாக அம்மாநில ஆம் ஆத்மி தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



latest tamil news




பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தற்போதுமுதலே தேர்தல் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான் இதுகுறித்து கூறுகையில் மூத்த பாஜ., உறுப்பினர் ஒருவர் பணம் மற்றும் யூனியன் அமைச்சர் பதவி ஆகியவற்றை அளித்து தன்னை பாஜ.,வில் சேரும்படி வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் சாங்குர் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான இவர் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலை பயன்படுத்தி பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் ஆனால் தான் இதற்கெல்லாம் மடிய போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தை அடியோடு மறுத்துள்ளது பஞ்சாப் பாஜ.,. தைரியமிருந்தால் ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான் பணம் கொடுத்ததாக கூறப்படும் பாஜ., உறுப்பினர் பெயரை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.


latest tamil news



அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் எதிர்க் கட்சியின் மூத்த உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜ., குதிரை பேரம் பேசிவருவதாக ,பகவந்த் மான் பிரசார கூட்டங்களில் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202108:28:10 IST Report Abuse
பேசும் தமிழன் கான் கிராஸ் ஆட்களிடம் பெட்டி வாங்கி கொண்டு... அடுத்த கட்சி மீது குற்றசாட்டு... இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பிட்சை எடுக்கலாம்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
05-டிச-202122:15:31 IST Report Abuse
Duruvesan Moorkan ஹிந்து பெயரில், அவன் பேரை சொன்னா அது கீசோறு சொன்ன ஐடியா வா இருக்கும்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-டிச-202121:21:30 IST Report Abuse
sankaranarayanan தெரிந்துதாய்யா குதிரை பேரம் செய்கிறார்கள். பின்னே என்ன கழுதை பேரமா செய்யமுடியும். அங்குள்ளவர்கள் எல்லாம் குதிரைகள் போல நடந்துகொள்வதால் சரியாகத்தான் அவர் குதிரை பேரம் என்று குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் குதிரை என்றால் விவசாயி போர்வையில்தான் இருக்கும் ஆனால் விவசாயிகள் அல்ல அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X