அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ.,வை குறைத்து மதிப்பிட வேண்டாம்':தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை:''அடக்குமுறையை எதிர்க்கிற சக்தி பா.ஜ.,வுக்கு மட்டுமே உண்டு. பா.ஜ.,வை குறைத்து மதிப்பிட வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில், சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக,அக்கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர்

சென்னை:''அடக்குமுறையை எதிர்க்கிற சக்தி பா.ஜ.,வுக்கு மட்டுமே உண்டு. பா.ஜ.,வை குறைத்து மதிப்பிட வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.



latest tamil news




சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில், சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக,அக்கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிவில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது:தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, ஆளுங்கட்சி சொல்வதை கேட்கும் அதிகாரிகளையே நியமிப்பர். அவர்கள் தான், தோல்வி அடைந்த ஆளுங்கட்சியினரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பர். அடக்குமுறையை எதிர்க்கிற சக்தி பா.ஜ.,வுக்கு மட்டும் தான் உண்டு. யாரும் பா.ஜ.,வை குறைத்து மதிப்பிட வேண்டாம்.முறைகேடு செய்வதை தி.மு.க., நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல், அதை எப்படி சந்திக்க வேண்டுமோ; அந்த வகையில் சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளது.


latest tamil news




சென்னையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட எந்த தேர்தல் வாக்குறுதியையும் தி.மு.க., நிறைவேற்ற வில்லை. இவற்றை மக்களிடம் தெரிவித்து ஓட்டு கேட்போம்; பா.ஜ., பக்கம் மக்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202112:13:06 IST Report Abuse
அப்புசாமி உண்மைதான். ஒரு ஓட்டுக்கும் கீழே குறைத்து மதிப்பிடக் கூடாது.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-டிச-202109:47:05 IST Report Abuse
Priyan Vadanad கொரோனாவை சாதாரணமாக நினைக்கக்கூடாது. டெல்ட்டா மைக்ரோன் என்றெல்லாம் உருமாறி பதுங்கி பதுங்கி வரும். வளர்ந்து விட்டால் ஒருவழி பண்ணாமல் விடாது. பட்டதும் பட்டுக்கொண்டு இருப்பது போதும். எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
shan - sydney,ஆஸ்திரேலியா
06-டிச-202109:45:18 IST Report Abuse
shan இவர் தி மு க வின் ஸ்லீப்பர் செல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X