பயங்கரம்! நாகலாந்தில் அப்பாவிகள் 13 பேர் சுட்டுக்கொலை

Updated : டிச 06, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (33+ 9)
Share
Advertisement
கொஹிமா:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரம் அடைந்த மக்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பான விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன. கிராம மக்கள் நடத்திய தாக்குதலில்,
 பயங்கரம்! நாகலாந்தில்  அப்பாவிகள் 13 பேர் சுட்டுக்கொலை

கொஹிமா:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரம் அடைந்த மக்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பான விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன. கிராம மக்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
நாகாலாந்தில் முதல்வர் நெய்ப்பு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து உள்ளது.


பயங்கரவாதிகள் என நினைத்து 13 கிராமத்தினரை சுட்டுக்கொன்ற ராணுவம் நாகலாந்தில் பதற்றம்

மக்கள் கொந்தளிப்பு

என்.எஸ்.கே.என்., எனப்படும் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்துவதற்காக நாகாலாந்தின் மான் மாவட்டம் வழியாக வருவதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மான் மாவட்டத்தின் ஒடிங்க் மற்றும் டிரு கிராமங்களுக்கு இடையே துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் காத்திருந்தனர்.
அப்போது நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.அவர்களை வழிமறித்த பாதுகாப்பு படையினர், அந்த வாகனத்தை பயங்கரவாதிகளின் வாகனம் என தவறாக நினைத்து சரமாரியாக சுடத் துவங்கினர். இதில் ஆறு தொழிலாளர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சேராததையடுத்து, ஒடிங்க் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை தேடி வந்தனர். பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியது தெரிந்ததும், அவர்கள் கொந்தளித்தனர். பாதுகாப்புப் படையின் வாகனங்களுக்கும், முகாமுக்கும் தீ வைத்தனர். யூனியன் அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஒரு வீரர் உயிரிழந்தார்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மேலும் ஏழு பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிலர், அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியபோது, இந்த சம்பவம் தொடர்பான தகவல் முதல்வர் ரியோவுக்கு கிடைத்தது. உடனடியாக அவர் கொஹிமா திரும்பினார்.''இந்த துரதிருஷ்டவசமான சம்பவம்கண்டனத்துக்குரியது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, முதல்வர் ரியோ கூறி உள்ளார்.
இந்த சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே உள்ளிட்டோர் வேதனை தெரிவித்துஉள்ளனர்.


நடமாட்டம்

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்தன. அதன்படி மான் மாவட்டம் டிருவில் அதிரடி நடவடிக்கை எடுக்க வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு நடந்துள்ள சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதற்காக மிகவும் வருந்துகிறோம்.
அப்பாவி மக்களை பலி வாங்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக,ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரின் முகாமை சுற்றி கிராம மக்கள் திரண்டி நிற்பதால் பதற்றம் நிலவுகிறது. தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், மொபைல் போன் இணைப்பு மற்றும் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மிகப் பெரிய சுற்றுலா திருவிழாவான 'ஹார்ன்பில்' திருவிழா நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அதில் பழங்குடியின மக்கள் பங்கேற்கக் கூடாது என, கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.


பாதுகாப்பு இல்லை!

இந்த சம்பவம் கடும் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு உண்மையான பதிலை தர வேண்டும். நம் நாட்டில் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் உள்துறை அமைச்சகம் என்ன தான் செய்கிறது.
ராகுல்
எம்.பி., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (33+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
06-டிச-202117:49:01 IST Report Abuse
sankar ரானுவத்தின் இந்த பாதக செயலுக்கு கருணனிதி, வெள்ளைக்காரன் , எதிர்கட்சிகள் தான் காரணம் சந்தேகமில்லை.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-டிச-202117:21:49 IST Report Abuse
Priyan Vadanad ராவுளின் கருத்து கருவாட்டுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பதுபோல இருக்கிறது. இருந்தாலும் சரியென்றே படுகிறது.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
06-டிச-202115:45:39 IST Report Abuse
Mirthika Sathiamoorthi தமிழன் மட்டும் ஹிந்தி கத்துட்டு இருந்திருந்தா இது மாதிரி நடந்திருக்குமா? இப்போ வேதனைப்பட்டு? இதுக்கு காரணம் ஹிந்தி தடுத்த கட்டுமரக்குடும்பம்.. அந்த திருட்டு திராவிடம் இதுக்கு முழுபொறுப்பேற்று ஸ்டாலின் உடனடியா பதவி விலகவேண்டும். எப்புடி வழக்கம்போல இதிலும் நாம திமுகவை காறித்துப்பிட்டோம்.எவன் செத்த நமக்கென்ன....அப்பாடா இன்னைக்கு நைட்டு நிம்மதியா தூக்கம் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X