பொது செய்தி

தமிழ்நாடு

டில்லிக்கு கவர்னர் ரவி திடீர் பயணம்: தமிழக அரசியலில் பரபரப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று, ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.சமீபத்தில்
 டில்லிக்கு கவர்னர் ரவி திடீர் பயணம்: தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று, ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, 'நீட்' தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.இந்நிலையில், சேலம் கருப்பூர் பெரியார் பல்கலையில், 20வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. அதில், கவர்னர் ரவி, மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்குவதாக இருந்தது. ஆனால், கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று மாலை 4:30 மணிக்கு சென்னையில் இருந்து கவர்னர் ரவி, டில்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இன்று அவர் சந்திக்க உள்ளார்.மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உளவுத்துறையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 2014 முதல் மத்திய அரசிற்கும், நாகாலாந்து தேசிய சோஷியலிஸ்ட் போராட்ட அமைப்புக்கும் துாதுவராக செயல்பட்டார்.அவரது முயற்சியால் நாகலாந்து போராட்ட குழுவிற்கும், மத்திய அரசிற்கும் இடையே அமைதி உடன்படிக்கை, 2015ல் கையெழுத்தானது.
பின், 2019ல் நாகாலாந்து மாநில கவர்னராகவும்; செப்டம்பரில் தமிழக கவர்னராகவும் நியமிக்கப் பட்டார்.நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என கருதி 13 பேரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பார்லிமென்ட் கூட்டம் நடந்து வரும் நிலையில், இப்பிரச்னையை உடனுக்குடன் முடிவிற்கு கொண்டு வர, மத்திய அரசு விரும்புகிறது.

இதற்காகவே, நாகாலாந்து போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததால், கவர்னர் ரவி திடீரென டில்லி சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
06-டிச-202121:58:13 IST Report Abuse
sankar ஒன்றும் கிழிக்கமுடியாது.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
07-டிச-202101:28:58 IST Report Abuse
vadiveluஏன் எல்லாவற்றையும் ஏற்கனவே உங்க ஆளுங்க கிழிச்சுட்ட்டங்களா? இல்லை எதுவும் சமாதானம் ஆயிர கூடாது என்ற உங்க பிரார்த்தனையா ?...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
06-டிச-202120:48:16 IST Report Abuse
elakkumanan ஓட்டமா ஓடி ரொம்ப தூரம் போன பிறகு,.............நம்மள தேடி வரலையா ன்னு வடிவேல் சொன்னது மாதிரி படிச்சு பாருங்க....... இங்கே, அய்யயோ, கண்டுபிடிச்சுட்டானுவளோ..............நம்மள இல்லையா........இந்த காட்சி, இனிமேல் டைம் லூப் மாதிரி, திரும்ப திரும்ப வரும்................ஐயோ பாவம்...........
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
06-டிச-202119:35:03 IST Report Abuse
Narayanan நாகலாந்து விஷயங்களை அறிந்துகொள்ளவும் அதனை எப்படிகையாள்வது என்று அறியவும்தான் அழைக்கப்பட்டார் . இது ஒரு சாதாரண சம்பவம் .என்றாலும் திமுகவினரின் அடாவடி அரசியல் தரும் வேதனை எப்படியாவது இந்த அரசு கலைக்கப்படவேண்டும் . ஏழு ஆண்டுகளில் செய்யாததை செய்யவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கிவருகிறார்கள் . திமுக அரசின் அனைத்து செயல்களும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே இருக்கிறது . மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்ன திமுக அரசு இன்று பெண்களையும் குடிக்க அழைக்கிறார்கள் . தனி கடை வைக்கிறோம் என்கிறார்கள் . நாளை அது இலவசமாக கூட மாறலாம் . பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை , ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை . ஏன் போலிசுக்கே பாதுகாப்பு இல்லை . பிறகு எதற்கு இந்த அரசு . கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சிதொடரட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X