பொது செய்தி

இந்தியா

பெண்ணின் வாகனப் பதிவு பலகையில் ‛செக்ஸ்' என்ற வார்த்தை: பெண்கள் ஆணையம் நோட்டீஸ்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-டில்லியைச் சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகன பதிவு பலகையில் 'செக்ஸ்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதை மாற்றும்படி, டில்லி பெண்கள் ஆணையம், போக்குவரத்து துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.டில்லியில் வாகனங்களை பதிவு செய்யும் போது, டில்லியை குறிக்கும் டி.எல்., என்ற எழுத்தும், அதன்பின் மாவட்டத்திற்கான எண், அதன்பின் 'ஸ்கூட்டி' என்பதற்கு, 'எஸ்'

புதுடில்லி-டில்லியைச் சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகன பதிவு பலகையில் 'செக்ஸ்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதை மாற்றும்படி, டில்லி பெண்கள் ஆணையம், போக்குவரத்து துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.latest tamil news


டில்லியில் வாகனங்களை பதிவு செய்யும் போது, டில்லியை குறிக்கும் டி.எல்., என்ற எழுத்தும், அதன்பின் மாவட்டத்திற்கான எண், அதன்பின் 'ஸ்கூட்டி' என்பதற்கு, 'எஸ்' எழுத்தும் வழங்கப்படுகின்றன. அதன் பின் இரண்டு ஆங்கில எழுத்துடன் நான்கு இலக்க பதிவு எண் வழங்கப்படுகின்றன. வலியுறுத்தல்டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் இருசக்கர வாகனம் வாங்கினார். அவருக்கு, டிஎல் 3எஸ் இஎக்ஸ் - DL 3S EX - என பதிவு பலகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை படிக்கும் போது 'செக்ஸ்' என பொருள்படும்படி வருகிறது.

இதனால் அந்த பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகி உள்ளார். சாலையில் செல்லும்போது பலர் இதை கூறி அவரை கிண்டல் செய்வதாகவும், பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக, டில்லி பெண்கள் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்துஉள்ளார். இதன் அடிப்படையில் போக்குவரத்து துறைக்கு டில்லி மகளிர் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இருசக்கர வாகன பதிவு எண்ணை உடனடியாக மாற்றி தரும்படி அதில் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.


latest tamil newsஉத்தரவு

மேலும் இதே போன்ற பதிவு எண் வரிசை கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பாக பதிவாகி உள்ள புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு நாட்களுக்குள் விளக்கமளிக்கும்படி டில்லி போக்குவரத்து துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202115:27:51 IST Report Abuse
Kalyanaraman Subramaniam பெண்களும் வேலை செய்யும் பங்கு மார்க்கெட்டில் SENSEX அப்படின்னு இருக்கே, அதுக்கு NSEக்கு நோட்டீஸ் அனுப்பிடலாமா ??
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-டிச-202113:01:31 IST Report Abuse
jayvee ஸ் என்பது வண்டியை குறிப்பது அல்ல.. தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிர்க்கப்பதால், எழுத்துக்களின் வரிசையும் கூடிவருகிறது ..
Rate this:
Cancel
06-டிச-202110:52:42 IST Report Abuse
அப்புசாமி இது உப்பு சப்பில்லாத விஷயம். பதிவு எண்கள் கம்ப்யூட்டரால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் அதிகாதிகள் தவறு எதுவும் இல்லை. பிடிக்கலேன்னா வேற பிளேட் வாங்கிக்கலாம். தகறாரு இல்லாம குடுத்திடலாம். கேவலமா சினிமால காமிக்கறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X