பொது செய்தி

இந்தியா

50 சதவீதத்திற்கும் மேல் இரு 'டோஸ்' தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சர்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021
Share
Advertisement
புதுடில்லி-நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 84.8 சதவீதத்திற்கும்

புதுடில்லி-நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.



latest tamil news


கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 84.8 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது.


latest tamil news


கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக வெற்றி பெறுவோம் என்பதை இதன் வாயிலாக உணர்த்தி உள்ளோம்.டிசம்பர் 4ம் தேதி மட்டும், 1.04 கோடிக்கும் அதிகமான டோஸ் மக்களை சென்றடைந்து உள்ளது. இதுவரை செலுத்திய தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 127.61 கோடியை கடந்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X