பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் ராஜ்யசபாவில் 52 சதவீத நேரம் வீண்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ராஜ்யசபாவில் 52 சதவீத நேரம் வீணாகியுள்ளது.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ௨௯ல் துவங்கியது. முதல்நாளே இரு சபைகளிலும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.ராஜ்யசபாவில் முந்தைய கூட்டத் தொடரில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்ட

புதுடில்லி-பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ராஜ்யசபாவில் 52 சதவீத நேரம் வீணாகியுள்ளது.



latest tamil news


பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ௨௯ல் துவங்கியது. முதல்நாளே இரு சபைகளிலும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.ராஜ்யசபாவில் முந்தைய கூட்டத் தொடரில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள தற்போதைய கூட்டத் தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


latest tamil news


இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா தினமும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த ௨ம் தேதி ராஜ்யசபா மதியத்துக்கு மேலும், ௩ம் தேதி முழுமையாகவும் செயல்பட்டது. குளிர்காலத் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் ராஜ்யசபாவில் 52 சதவீத நேரம் வீணாகியதாக ராஜ்யசபா செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202110:48:04 IST Report Abuse
அப்புசாமி ஆமா... 100 சதவீதம் நேரத்தை வீணடிக்காம உழைச்சு ஆளுக்கு 15 லட்சமும் வருஷத்துக்கு 2 கோடி வேலையும் குடுத்திருவாங்க போலே... போவமா...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-டிச-202109:33:53 IST Report Abuse
Priyan Vadanad ஆளும் கட்சியின் பிடிவாதத்தால் 52 சதவீத நேரம் வேஸ்ட் என்றுகூட பொருள் கொள்ளலாமே
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202109:32:28 IST Report Abuse
duruvasar சபைக்கு போவதே கலாட்டா, வெளிநடப்பு என்ற திராவிட கலாச்சாரம் டெல்லி வரை பரவிவிட்டது. அண்ணன் உதயநிதி வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X