பொது செய்தி

இந்தியா

'கில்லர்ஸ்' இந்திய கடற்படைப் பிரிவுக்கு 'ஜனாதிபதி கொடி' கவுரவம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை-பாகிஸ்தான் போர்க் கப்பல்களை தாக்கி கடலில் மூழ்கடித்த இந்திய கடற்படையின் 'கில்லர்ஸ்' படைப் பிரிவுக்கு, ஜனாதிபதி கொடி வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் நடந்தபோது, 'கில்லர்ஸ் ஸ்குவாட்ரான்' எனப்படும், இந்திய கடற்படைக்கு சொந்த மான ஏவுகணையுடன் கூடிய போர்க்கப்பல்கள், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து தாக்குதல்

மும்பை-பாகிஸ்தான் போர்க் கப்பல்களை தாக்கி கடலில் மூழ்கடித்த இந்திய கடற்படையின் 'கில்லர்ஸ்' படைப் பிரிவுக்கு, ஜனாதிபதி கொடி வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.



latest tamil news


கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் நடந்தபோது, 'கில்லர்ஸ் ஸ்குவாட்ரான்' எனப்படும், இந்திய கடற்படைக்கு சொந்த மான ஏவுகணையுடன் கூடிய போர்க்கப்பல்கள், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தின.துறைமுக பகுதியில் இருந்த பாக்., கடற்படையின் போர்க் கப்பல்கள் தகர்க்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டன.


latest tamil news


இந்த படைப் பிரிவினர், 'ஆப்பரேஷன் விஜய், ஆப்பரேஷன் பராக்கிரமம்' உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் இந்த படைப் பிரிவின் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் நடந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கில்லர்ஸ் படைப் பிரிவை கவுரவிக்கும் விதமாக, அதற்கு ஜனாதிபதியின் கொடி வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
06-டிச-202107:21:53 IST Report Abuse
amuthan நல்ல விஷயம். உலகத்திலே ஒரு நாட்டின் துறைமுகத்தின் உள்ளே சென்று நடத்தப் பட்ட இரண்டாவது தாக்குதல். ஒன்று ப்யர்ல்ஸ் ஹார்பர் தாக்குதல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X