அகிலேஷ் வாகனத்தில் கலாம் படம்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ-சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பிரசார வாகனத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படம் இடம்பெற்றிருப்பது உத்தர பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை முக்கிய கட்சிகள் ஏற்கனவே துவக்கி விட்டன. இந்நிலையில்

லக்னோ-சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பிரசார வாகனத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படம் இடம்பெற்றிருப்பது உத்தர பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை முக்கிய கட்சிகள் ஏற்கனவே துவக்கி விட்டன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவின் பிரசார வாகனமான 'சமாஜ்வாதி விஜய் யாத்ரா'வில் சர்தார் வல்லபபாய் படேல், ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.அந்த வாகனத்தில் தற்போது படேல் படத்துக்குக் அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படமும் இடம் பெற்றுள்ளது.


latest tamil news


'இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறவே சமாஜ்வாதி இதுபோன்ற அரசியல் செய்கிறது' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.இது குறித்து சமாஜ்வாதி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறியதாவது:கடந்த 2002ல் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமை சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் தான் முன்மொழிந்தார். அவர் படத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை.கலாம், கட்சி சார்பற்ற மக்கள் விரும்பும் தலைவர். முஸ்லிம்களின் ஓட்டுக்காக அவர் படம் பயன்படுத்தப்படுகிறது என்பது தவறானது.நாட்டின் சிறந்த அனைத்து தலைவர்களுக்கும் சமாஜ்வாதி மரியாதை செலுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
06-டிச-202114:08:41 IST Report Abuse
INDIAN Kumar இத்தாலி காங்கிரஸ் கட்சி கூட அணைத்து சுதந்திர போராட்ட வீரர்களை...செய்கிறது வாக்கு விழுந்து விடுகிறதா என்ன ???
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
06-டிச-202114:06:50 IST Report Abuse
INDIAN Kumar படம் போட்டு விட்டால் மட்டும் வோட்டு விழுந்துவிடாது , மக்களின் மனம் கவர வேண்டும்.
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
06-டிச-202113:53:43 IST Report Abuse
நல்லவன் நீங்க மக்களை எம்மாதினாமாதிரி, அவங்க ஏதோ புதுசா முயற்சி பண்ணுறாங்க. ஏன் நீங்கமட்டும்தான் மக்களை ஏமாத்துணும்மா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X