பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து பள்ளிகளிலும் இனி நூலக பாட வேளை கட்டாயம்!

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை- --அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாட வேளைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை கமிஷனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒரு முறை நுாலக பாட வேளைகளை கட்டாயம் நடத்த வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.தனி அறைபல

சென்னை- --அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாட வேளைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை கமிஷனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை



latest tamil news


:அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒரு முறை நுாலக பாட வேளைகளை கட்டாயம் நடத்த வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.தனி அறைபல பள்ளிகளில் நுாலகங்களின் பயன், மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. நுாலக பாட வேளைகள் முறையாக நடத்தப்படுவதில்லை.எனவே, ஒவ்வொரு பள்ளியும் வாரம் ஒரு முறை, நுாலக பாட வேளைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். நுாலகத்துக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். நுாலக பாட வேளைகளில், மாணவர்கள் புத்தகங்களை படிப்பதுடன், வீட்டிற்கு எடுத்துச் சென்று, படிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான பதிவேடை பராமரிக்க வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததும், அவர்களுக்கு கட்டுரை, கதை, நுால் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்த வேண்டும்.


latest tamil news


விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, வாசகர் வட்டம் உருவாக்க வேண்டும். அருகில் உள்ள நுாலகங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.ஆலோசனைகள்புத்தக நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும். தேவையான புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள மாவட்ட மைய நுாலகம் மற்றும் பிற நுாலகங்களை அணுகி, மாணவர் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்களை பெற்று பயன்படுத்தலாம்.நுாலகங்களில் நாளிதழ்களை படிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
06-டிச-202113:07:29 IST Report Abuse
jayvee இது ஏற்கனவே நடைமுறயில் இருந்த ஒரு விஷயம்தான் .. என்ன அரசு பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
06-டிச-202109:46:26 IST Report Abuse
தத்வமசி அது ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. அரசு பள்ளிகளில் நூலகர் இருக்கிறார். ஆனால் தனியாருக்கு உள்ள சட்ட திட்டம் போல தேவையான அளவு நூலக கட்டிடம் இருக்கிறதா ? தேவையான அளவு புத்தகங்கள் இருக்கிறனவா ? என்று ஆய்ந்து அதற்கு ஏற்றார் போல ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி சிலவு திட்டங்கள் தீட்டி சிலவு செய்யுங்கள். அது போல கழிப்பறைகள். கணக்கு தான் உள்ளது. சுகாதாரம் எத்தனை பள்ளிகளில் உள்ளது என்று ஆய்வு செய்யுங்கள். தனியார் பள்ளிகளில் கல்லா கட்ட எல்லோரும் மூக்கை நுழைப்பது போல லட்சக்கணக்கான மாணவர்களின் சுகாதாரத்திலும் கல்வியிலும் மேம்பட இவர்கள் அங்கும் தங்களில் திறமையை காட்டி நடந்து கொள்ளட்டும். சிலைகள், பூங்காக்கள், மணி மண்டபங்களை பிறகு கட்டலாம்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். நிச்சயமாக நூலகத்தில் முத்தமிழ் வித்தவரின் நஞ்சுக்கு நீதி மற்றும் தோல்காப்பிய பூங்கா வைக்கப்பட்டு திராவிட மாணவ மணிகள் படிக்க வேண்டும் எங்கள் இன்பாண்ணா கால்பந்து களத்தில் நிகழ்த்திய சாதனைகள் வீரம் சொறிந்த சரித்திரக் கதைகள் திராவிடக் குஞ்சுகளுக்கு ஊக்கமழிக்கும்.
Rate this:
06-டிச-202117:35:37 IST Report Abuse
Vittalanandஅக நானூறு,, கம்ப ரசம் போன்ற நூல்கள் இருந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X