அம்பத்துார், ; மழைநீர் சேகரிப்பிற்காக மேம்படுத்தப்பட்ட மாநகராட்சி குளங்கள், பலத்த மழையால் சேதமடைந்தன.சென்னையில், 15 மண்டலங்களில் உள்ள, 210 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி, கரையை பலப்படுத்தி நடை மேடை, சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் தடுப்பு சுவர் அமைத்து மேம்படுத்த, பல கோடி ரூபாய் திட்டப்பணி, 2019ல் துவங்கியது
.மேம்பாடுஇதில் அம்பத்துார் மண்டலத்தின் 79வது வார்டு, ஒரகடம் கணபதி நகரிலுள்ள தாமரை குளம் 4.5 கோடி ரூபாய் செலவிலும், 82வது வார்டு அணுகு சாலையை ஒட்டிய மேனாம்பேடு தாங்கல் குளம், 3.87 கோடியிலும், 83வது வார்டு, பெருமாள் கோவில் குளம் 2.74 கோடி ரூபாயிலும் மேம்wwறwபடுத்தப்பட்டு வருகின்றன.மாதனாங்குப்பம் தாங்கல் ஏரி குளம் 8.66 கோடியிலும், 84வது வார்டு பட்டரவாக்கம் ஆவின் சாலையிலுள்ள பெரிய குளம் 2.26 கோடியிலும், 85வது வார்டு மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள மாநகராட்சி குளம் 2.21
கோடியிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரகடம் தாமரை குளம், பட்டரவாக்கம் பெரிய குளம், மேனாம்பேடு தாங்கல் குளம் ஆகியவை பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட இருந்தன. ஆனால், கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் தாமரை குளம், பெரிய குளத்தின் பெரும் பகுதி சேதமடைந்து, குளங்களும் நிரம்பவில்லை.முழுமையாக நிரம்பிய மேனாம்பேடு அணுகு சாலை தாங்கல் குளத்தின் கரை, பாரதியார் நகர் அருகே சேதமடைந்து, தண்ணீர் வீணானது.அதிர்ச்சிஇப்படி, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே குளங்கள்
சேதமடைந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மண் பரிசோதனை, நீர் நிலைக்கான தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மண்டல பொறியாளர்களின் நேரடி ஆய்வு ஏதுமின்றி, ஒப்பந்ததாரர்களின் விருப்பம் போல், பெயரளவில் மேம்பாட்டு பணிகள் நடந்து தான், இதற்கு காரணம் என, நீர்நிலை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சி மற்றும்
வருவாய்த் துறை அதிகாரிகள், குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், மேம்பாட்டு பணியை செய்துள்ளனர். மேலும், குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மண்ணை நிரப்பி கரை அமைத்து, கவர்ச்சிக்காக அதன் மீது பளிங்கு கற்களை உறுதியின்றி பதித்துள்ளனர்.குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் மற்றும் அதன் மீது
அமைக்கப்பட்டுள்ள கம்பிகளும், உறுதியற்ற நிலையில் உள்ளதாக புகார்கள்
எழுந்துள்ளன.
மேலும், பிரச்னையில் இருந்து தப்பிக்க, சேதம் அடைந்த குளங்களை அரைகுறையாக சீரமைத்தால், மீண்டும் விபத்து பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த குளங்களுடன், மேம்பாடு நடந்து வரும் அனைத்து குளங்களின் பணியை ஆய்வு செய்ய, மாநகராட்சி நிர்வாகம் தனி குழு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE