இது உங்கள் இடம்: கும்மாளமடிக்கின்றனர்!| Dinamalar

இது உங்கள் இடம்: கும்மாளமடிக்கின்றனர்!

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (118)
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.கேசவன், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்:பிரகலாதனின் தந்தை இரண்யன் ஆண்ட நாட்டில், அந்த நாட்டில் வாழும் மக்கள் யாரும் இறைவனை வணங்கக் கூடாது. தன்னைத் தான் இறைவனாக கருதி வணங்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தான்.அதை ஒட்டிய பழமொழி தான், 'இரண்யன் நாட்டில்
இது உங்கள், இடம், இறை வணக்கம், பள்ளிகள், தடை, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.கேசவன், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்:

பிரகலாதனின் தந்தை இரண்யன் ஆண்ட நாட்டில், அந்த நாட்டில் வாழும் மக்கள் யாரும் இறைவனை வணங்கக் கூடாது. தன்னைத் தான் இறைவனாக கருதி வணங்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தான்.அதை ஒட்டிய பழமொழி தான், 'இரண்யன் நாட்டில் இரண்யாய நமஹ:!' என்று சொல்ல வேண்டும் என்ற பழமொழி.

தற்போது தமிழ் நாட்டில் இறை நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது.அந்த ஆட்சி, கல்வி கூடங்களில் இனி, இறைவணக்கம் பாடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது.இறை நம்பிக்கை இல்லாத கழகம் அப்படி ஒரு ஆணையை பிறப்பித்தாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.கல்வி கூடங்களிலும், கூட்ட அரங்குகளிலும் இறைவணக்கம் என்ற பெயரில் கடவுள் வாழ்த்து பாடுவது மரபு.கடந்த, 75 ஆண்டுகளாக பிரச்னை இல்லாமல் இருந்த அந்த இறைவணக்கம் நிகழ்ச்சிக்கு, தற்போது, 'விடியல்' ஆட்சியில், 'வெடிகுண்டு' வைக்கப் பட்டுள்ளது.

இறை வணக்கம், கடவுள் வாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்து போன்றவை எதுவும் பாடக்கூடாது என்றால், வேறு என்ன பாட்டு பாடுவர்?கழக பிரசார பாடல்களான, 'ஓடி வருகிறான் உதய சூரியன்!' என்ற பாடலையா அல்லது 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!' என்ற பாடலையா... எந்த பாடலை பாடச் சொல்லப் போகின்றனர்?


latest tamil news


இந்திய நாட்டில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஹிந்தி என்ற ஒரு மொழியை கல்வி கூடங்களில் கற்று கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஹிந்தித் திணிப்பு' என்று சொல்லி போராட்டம் நடத்தி, பல நுாறு உயிர்களை 'காவு' வாங்கிஉள்ள கழகமே, தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் வணங்கும் இறைவனை போற்றி புகழ்ந்து பாடும் இறைவணக்கம் பாடலை, பாடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளீர்களே! இதை என்ன பெயர் சொல்லி அழைப்பது?'

அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்' என்றொரு சொலவடை உண்டு.அந்த சொலவடையை நிரூபிப்பது போல, வாராது வந்த மாமணியாக கிடைத்துள்ள ஆட்சி அதிகாரத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்பது கூட புரியாமல் அல்லவா, 'குடை பிடித்து' கொண்டு கும்மாளம் அடித்து கொண்டிருக்கிறீர்கள்?

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X