பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கீழணையில் இருந்து திறப்பு

Added : டிச 06, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து 45 நாட்களுக்கு பின், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து இருப்பதால் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தொடர்ந்து 40 நாட்களுக்கு பெய்தது. டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நெல் பயிர்களில் தண்ணீர் தேங்கியது.

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து 45 நாட்களுக்கு பின், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து இருப்பதால் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தொடர்ந்து 40 நாட்களுக்கு பெய்தது.

டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நெல் பயிர்களில் தண்ணீர் தேங்கியது. அதனால் கடந்த 20ம் தேதி முதல் கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டன. தொடர் கன மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த நவம்பர் 3ம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மழைக்கு பின், விவசாயிகள் நெல் பயிர்களுக்கு மேல் உரமிட கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 45 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் 7 அடியாக உள்ளது. வடவாற்றில் 350 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 200 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்காலில் 200 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் 13 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றுவதால், முக்கொம்பு மேல் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 16 ஆயிரம் கன அடியும், கல்லணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கீழணைக்கு வரும் உபரி நீர் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கீழ் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நீர் மட்டம் 45 அடியாக உள்ளது. ஏரிக்கு நேற்று 87 கன அடி தண்ணீர் மட்டுமே வரத்து இருந்தது. ஏரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 50 கன அடியும், சென்னை குடிநீருக்கு 62 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியில் தண்ணீர் மட்டம் 13.10 அடி உயரத்திற்கு 870.70 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X