பொது செய்தி

இந்தியா

3 அடி உயரமுள்ளவருக்கு 'டிரைவிங் லைசென்ஸ்'

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐதராபாத்-தெலுங்கானாவில் 3 அடி உயரமுள்ள ஒருவருக்கு, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவின், கரீம்நகரைச் சேர்ந்த கட்டிபள்ளி ஷிவபால் 42, தற்போது ஐதராபாதில் வசித்து வருகிறார்.3 அடி உயரமுள்ள அவர் 2000ல் ஐதராபாதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்தே 2004ல் பட்டம் பெற்றார்.கார் ஓட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் உயரம் அதற்கு தடையாக

ஐதராபாத்-தெலுங்கானாவில் 3 அடி உயரமுள்ள ஒருவருக்கு, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவின், கரீம்நகரைச் சேர்ந்த கட்டிபள்ளி ஷிவபால் 42, தற்போது ஐதராபாதில் வசித்து வருகிறார்.



latest tamil news


3 அடி உயரமுள்ள அவர் 2000ல் ஐதராபாதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்தே 2004ல் பட்டம் பெற்றார்.கார் ஓட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் உயரம் அதற்கு தடையாக இருந்தது. இந்நிலையில், இன்டர்நெட்டில் பார்த்தபோது உயரம் குறைவான ஒருவர் தனக்கு ஏற்றபடி காரை மாற்றியமைத்தது குறித்து தெரிந்து கொண்டார்.

அதையடுத்து காரை வாங்கி தன் உயரத்துக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் செய்தார். நண்பர்கள் உதவியுடன் கார் ஓட்டப் பழகினார். ஆனால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியவில்லை. சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட உய ரம் இருந்தால் மட்டுமே லைசென்ஸ் பெற முடியும். போக்குவரத்து உயரதிகாரிகளை சந்தித்து பேசினார்.


latest tamil news


இதையடுத்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.நம் நாட்டிலேயே மிகவும் உயரம் குறைவான நபருக்கு லைசென்ஸ் வழங்கப்படுவது இதுவே முதல்முறை. தன்னைப் போல் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கார் ஓட்டப் பயிற்சி அளிக்கப்போவதாக ஷிவபால் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeyakumar - chennai,இந்தியா
06-டிச-202109:43:27 IST Report Abuse
jeyakumar இதய சொல்ல உனக்கு வெட்கம் இல்லை.நீ நேர்மையானவனாக இருந்தால் எதற்கு இப்படி உளறுகிறாய். சோதனை நாட்கள் அன்று காசு கொடுத்து கூட்டம் சேர்த்து மக்கள் எதிர்ப்பு என்கிறாயே. தைரியம் இருந்தால் கொங்கு மண்டலத்தில் ராஜினாமா செய்யுங்கள் மக்கள் உங்களை ஆதரிக்கிறார்களா என்று பாப்போம்
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in. பெங்களூரு வாழ்த்துக்கள், தன்னம்பிக்கை மனிதன்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
06-டிச-202106:52:06 IST Report Abuse
 N.Purushothaman வாழ்த்துக்கள் ...விபத்தில்லாமல் ஓட்டும் அளவிற்கு பொறுமையையும் ஓட்டுநர் தரத்தை சமரசம் செய்து கொள்ளாமல் சொல்லி கொடுக்க வேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X