சிலி நாட்டில் புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு: 7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சாண்டியாகோ: சிலி நாட்டைச் சேர்ந்த பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு கூட்டில் 80 சதவீதத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை சமர்பித்துள்ளனர்.சிலியில் சாண்டியாகோவிற்கு தெற்கே 3 ஆயிரம் தொலைவில் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் செர்ரோ கீதோ எனும் பகுதி உள்ளது. இங்கு 15 கிலோமீட்டர் நீளத்திற்கு பல்வேறு பாறைகள்,

சாண்டியாகோ: சிலி நாட்டைச் சேர்ந்த பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு கூட்டில் 80 சதவீதத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை சமர்பித்துள்ளனர்.



latest tamil news


சிலியில் சாண்டியாகோவிற்கு தெற்கே 3 ஆயிரம் தொலைவில் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் செர்ரோ கீதோ எனும் பகுதி உள்ளது. இங்கு 15 கிலோமீட்டர் நீளத்திற்கு பல்வேறு பாறைகள், புதைப்படிவங்கள் உள்ளன. அகழ்வாராய்ச்சி தளமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கு அகழ்வாராய்ச்சியின் போது டைனோசரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அது குறித்த அறிக்கையை சிலி பல்கலைக்கழகத்தில் தற்போது விளக்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 7.1 முதல் 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அந்த பகுதியில் வாழ்ந்ததாக மதிப்பிடுகின்றோம். 7 அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்ட ஒரு தாவர உண்ணி இது. ஏற்கனவே அறியப்பட்ட டைனோசர் இனத்தை ஆராய்வதாக நம்பினோம்.


latest tamil news


ஆனால் அதன் வாலை ஆராய்ந்த போது தான் இது புதிய இனம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். இதன் வால் ஏழு ஜோடி ஆஸ்டியோடெர்ம்களால் (தோல் அடுக்குகளில் அமைந்துள்ள எலும்புத் தகடுகள்) மூடப்பட்டிருந்தது. பெரணி தாவரம் போன்ற அதன் மூலம் நமக்குத் தெரிந்த டைனோசர்களிலிருந்து மாறுபட்ட ஆயுதத்தை இது உருவாக்குகிறது. என கூறியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
06-டிச-202114:36:50 IST Report Abuse
Krishnan எதையாவது சொல்லி மக்களை முட்டாள் ஆக்குவது ஒரு வேலையாகவே இருக்குகிறார்கள். 7.5 கோடிகிறது எத்தனை ஆண்டுகள், மாதங்கள், நம்ம பாராளுமன்றதில் நடந்தது இந்த மசாத்தில் தெரியல, தேர்தல் வாக்குறுதி 4 மாசம் கழித்து தடமே இல்லாம போச்சு, இதுல 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்புள்ள டியானோசரை கண்டுபிடிச்சாங்கலம், புழுக்கறது ஒரு இது வேண்டாம். VIVP........
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
06-டிச-202113:23:04 IST Report Abuse
pattikkaattaan டைனோசர் பற்றி எந்த மத நூல்களிலும் குறிப்பிட படவில்லையே ஏன் ?.. மதங்கள் தொடங்கும்முன்பே அவை மடிந்துவிட்டனவோ ?..
Rate this:
Cancel
06-டிச-202110:10:29 IST Report Abuse
ஆரூர் ரங் பிற்காலத்தில் மெரீனா பீச்சிலும்😝 அகழாய்வு மூலம் மூன்று வினோதப்😉 பிறவிகள் இருந்த அடையாளம் கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X